உலக நலம் என்பது வாழ்கின்ற மக்களின் ஆரோக்யம், பொருளாதாரம், மகிழ்ச்சி நிலை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது எனலாம். ஆனால் ஒரு ஆண்டிற்கும் மேலாக ‘கொரொனா’ என்ற கிருமித்தாக்கம் உலகினையே அச்சுறுத்தி கொண்டும், அன்றாட வாழ்க்கை முறைகளுக்குப் பெருந்தடையாகவும் உள்ளதைப் பொதுவாக அறிய முடிகின்றது. இந்த ேநாய்த்தாக்கம் உருவான சீனா நாடு இன்று ஒழுக்கவிதிகளைக் முறையாகக் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் இன்றும் பலரின் வாழ்க்கை சிக்கலில் இருப்பதை காண்கிறோம். அலைகளாக வந்திருந்து பெருந்துன்பம் தருகின்ற இந்த ேநாய்த்தாக்கம், சீனநாட்டில் மட்டும் ஏன் தன் வீரியத்தை தொடரவில்லை. நேர்மறையாகச் சிந்திக்கும் போது, அந்த நாட்டின்கண் இலங்கிய நோய்நீக்கு விதிமுறைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை
நல்கியிருக்கிறாகள் என்று எண்ண வாய்ப்புள்ளதா?.
“வகையறிநது; தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு” (குறள்.878)
மேற்குறித்த குறளானது, படைநுட்பமாகக் கூறப்பட்டிருப்பினும், குறிப்பாக நம்மை அழிக்கக்கூடிய எந்த வகையான பகை நிலைக்கும் ஏதுவாகக் கொள்வதற்கு இடமுண்டு எனலாம். இன்றைய “Bio – wars” உயிரியில் சார்நுட்பங்களைக் கொண்டு அழிக்கும் புதுயுக உலகில் குறளின்பொருள் மிகப்பொருத்தமாக உள்ளதை உணரமுடிகிறது.
இதில் “வகையறிந்து” என்ற பதமானது, வழிமுறைகளை வரையறுக்கிறது. ஒன்றை எதிர்கொள்ள வேண்டுமெனின் முறையான திட்டமிட்ட வழிமுறைகளாவன மிக இன்றியமையாதது. உலக சுகாதார வல்லுநார்கள் அறிவார்ந்த உழைப்பினால், நோய்த்தாக்கம் ஏற்படாது பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுத்தமாகக் கைகளை வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் அவசியங்களை அழுத்தமாகக் கூறியுள்ளனர். இதனைப் பற்றிச் செய்தல் அனைவரின் பொறுப்பாகும்.
“தற்செய்து”என்பது, தன்னை வலிமைப்படுத்திக்கொள்ளல் என்பதாகும். நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடிய நல்ல பொருத்தமான உணவுகளை தப்பாது உண்டு எதிர்ப்பு சக்தியை தன்னளவில் உருவாக்கம் செய்துகொள்ள வேண்டியது. இதனைக் கருத்தில் கொள்ளவேண்டியதும் பொறுப்பாகும். மேலும் பல கடிய முயற்சிகளுக்குப் பினன்ர் பல எதிர்ப்புச் சக்தியை தரக்கூடிய வேக்சின்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனையும் மருத்துவ ஆலோசனைப்படி செலுத்திக்கொண்டு வலிமைப்படுத்திக்கொள்வது பொறுப்பாகும்.
“தற்காப்பு” என்பது, உலக சுகாதார வல்லுநர்கள் வரையறுத்தவழி, தேவையின்றி வெளியில் செல்வதை இயன்றவரை சுருக்கிக்கொண்டு, வாழ்வின் நீட்சியைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய நுட்பமாகும். இந்தநிலை பொதுவாகவே பல நன்மைகளை உலகினருக்குத் தரவல்லது.
மேற்குறித்தவழி வரையறுக்கப்பெற்ற கொரொனாவிற்கு எதிரான மருத்துவ நெறிமுறைகளை பிறழ்வின்றிப் பின்பற்றும் போது நோயின் வீச்சானது வலுவிழந்தும், செயலிழந்தும் அழிவது உறுதியாகும். இந்தநிலையானது, “வருமுன்காத்தல்” என்ற அற்புத தங்கவிதிக்கு ஒப்பானது. ஒருவேளை வந்தாலும், உலக சுகாதாரத் துறை வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றும் போது, நோயானது தணிந்து போவது திண்ணமாகும். எனவே, பொது அறிவினைப் பண்படுத்தி-பயன்படுத்துவதே உரிய வழிமுறையாகத் திகழ்ந்து மனிதகுலத்தை நோயின் கோரப்பிடியிலிருந்து காத்துக்கொள்ள வகை செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக,
அன்றன்று நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாக இருத்தல்.
இயன்றளவு பணிகளை நிறைவுடன் செய்தல்
அச்சமின்றி இயல்பாக இருத்தல்.
எந்த நேரமும் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து நோய்சார்ந்த செய்திகளில் மூழ்காதிருத்தல்.
உடற்பயிற்சிகளை இயன்றளவு நித்தமும் ஆர்வமுடன் செய்தல்.
அரசு அறிவிக்கும் நோய் நீக்கு
நெறிமுறைகளைத் தப்பாது கடைபிடித்தல்.
நோய் சார்ந்து தவறான அல்லது பதட்டமாக்கக்கூடிய தகவல்களைத் தருவிக்காதிருத்தல்.
இக்கொடிய நோய் என்று தீரும் என்ற கனத்த மனதுடன் இருந்திராது, அன்றன்று ஆற்ற வேண்டிய பணிகளை எவ்வித மாறுபாடின்றிச் செய்வதும் ஒரு மருந்தாக அமையும். தனக்கும் வந்துவிடுமோ! என்ற அச்சவுணர்வானது மன இறுக்கத்திற்கு வழிகோலும். எனவே, தன்னம்பிக்கையுடன், ஆனால் எவ்வித அலட்சியத்திற்கும் இடமின்றி நாளும் வாழ்முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. “கடன் என்ப நல்லவை எல்லாம்”(குறள்.981) எவையெல்லாம் தப்பாது பின்பற்ற வேண்டிய அவசியப் பணிகள் என்பதனை உணர்ந்து எவரின் உத்தரவிற்கும் காத்திராது மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடும் உள்ளது. இந்த உலகமானது பல இன்னல்களைக் கண்டுள்ளது. அதிலிருந்து மீண்டும் வந்துள்ளது. எனவே இக்கொடிய காலங்களும் கடந்து போகும் என்ற அசவாத நம்பிக்கை நமக்குள் வேர்பிடிக்க வேண்டும்.
“நோய்நாடி நோய் முதல்நாடி” (குறள்.949) என்றவழி,
இந்த ேநாய்த்தாக்கத்திற்கான மூலத்தை இன்னும் தீர்வாக அறியமுடியவில்லை என்றபோதும், பல மருத்துவ வல்லுநர்கள் பல முன்களப்பணியாளர்கள், பல நல்லவுள்ளங்கள் எவ்விதச் சுயநலமுமின்றி பலஉயிர்களைக் காப்பாற்ற வேண்டி உழைப்பதை எண்ணும்போது, நாம் அனைவரும் உள்ளத்து நன்றியினை நாளும் அவர்களுக்கு மகிழ்வுடன் சொல்வோம்.