ஆளப் பிறந்தோம் – 33

திரு. இள. தினேஷ் பகத்
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.
பெரும்பாலான வசதி படைத்தவர்கள் கல்வி என்ன செய்துவிடும், கல்வியால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் எனக் குறைகூறிக்கொண்டே நம் முன்னோர்களின் செல்வத்தை மூலதனமாக கொண்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆனால், எந்தவிதப் பின்புலமும் இன்றி வறுமையான சூழலிலும் கல்வி ஒன்றை மட்டுமே ஆயுதமாக்கித் தானும் உயர்ந்து தன்னுடைய தலைமுறையின் மாற்றத்தையும் உருவாக்க வல்லது கல்வி ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த இதழில் மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாக உள்ள 362 MTS (Multi Tasking Staff) (General) பணியிடங்களுக்கான அறிவிப்பு வரப்பெற்றள்ளது. அத்தேர்வினைப் பற்றிதான் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் அனாதை இல்லத்தில் உருவான கலெக்டர் திரு. அப்துல்நாசர் அவர்களின் கதையைத்தான் பார்க்க இருக்கிறோம்.
கேரளா மாநிலத்தில் தலச்சேரி என்னும் ஊரில் மிகவும் வறுமையான சூழலில் உள்ள பெற்றோர்க்கு மகனாகப் பிறக்கிறார். இவர் உடன்பிறந்தோர் இவருடன் சேர்த்து 6 பேர். இவருக்கு 5 – வயதாக இருக்கும் போதே இவரது தந்தை இறந்துவிடக் கடுமையான நிதி நெருக்கடியைக் குடும்பம் சந்தித்தது.
இவரது தாயார் தனது குழந்தைகளுக்கு உணவளிக்கப் பல்வேறு வேலைகளைச் செய்தார். குடும்ப வறுமையின் காரணமாக இவரும் இவருடன் பிறந்த உடன்பிறப்புகளும் அனாதை இல்லங்களில் கல்வி கற்றனர்.
இவர், தனது குழந்தைப் பருவத்திலேயே தனது குடும்பச் சுமையினை குறைக்க பல வேலைகள் செய்தார். 10 வயதாக இருக்கும்போது உள்ளூர் ஓட்டல்களில் துப்புரவுப் பணியாளராகவும், பிறகு ஓட்டல்களில் சப்ளையராகவும், பிறகு தொலைப்பேசி ஆப்ேரட்டராகவும், பள்ளி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பும் எடுத்தார். இந்த வறுமையின் கோர தாண்டவத்திலும் தலச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். இது அவரது பின்னணியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சாதனை ஆகும். பிறகு முதுகலைப் படிப்பிற்கு பிறகு கேரளா அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் நடத்தும் Group-C தேர்வில் தேர்ச்சி பெற்று கேரள சுகாதாரத் துறையில் அரசு ஊழியராகச் சேர்ந்தார்.
தன்னுடைய இலட்சிய கனவினை அடைவதற்காக தொடர்ந்து படித்தும் வந்தார். அதன் பயனாக 2006 – ஆம் ஆண்டு கேரளா அரசின் மாநிலக் குடிமைப் பணிகள் தேர்வினை எழுதித் தேர்ச்சிப் பெற்று துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அவரது நிலையான செயல்திறன், தலைமைத்துவத் திறன் (ம) நிர்வாகத் திறன் காரணமாக, கேரள அரசு IAS பணிக்கு உயர்த்தியது.
IAS அதிகாரியான பிறகு, இவர் கேரள அரசின் கொல்லிடம் மாவட்ட ஆட்சியர் (ம) வீட்டு வசதி ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். தற்போது சிறப்புச் செயலராக பணியாற்றி வருகிறார்.
திரு. அப்துல் நாசர், IAS அவர்களை நமது ஆளுமைச் சிற்பி இதழ் பாராட்டி மகிழ்கின்றது.
இவரின் வாழ்க்கைக் கதை வெறும் தனிப்பட்ட வெற்றியைவிட அதிகம் சோதனைகளை எதிர்க்கொள்ளும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு பாடமாகும். தெளிவான குறிக்கோளும் கடின உழைப்பும் இருந்தால், எந்தவொரு சூழ்நிலையையும் தாண்டி ஒருவர் உயர்ந்த நிலையை அடைய இயலும்.
மத்திய அரசு உளவுத் துறையில் MTS (Multi Tasking Staff) (General) பணிக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 14.12.2025 ஆகும்.