உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 29
– முனைவர் எஸ்.அன்பரசு

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். 1956 – ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் காந்தியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமியத் தொழில்களை மேம்படுத்துதல் என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை, மேலாண்மை, தமிழ் மொழி, யோகா மற்றும் சில வெளிநாட்டு மொழிகள், தொழில்நுட்பம் சார்ந்த இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுவதுமாக நிதியளிக்கப்படுகிறது. 3000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

தேசியத் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் சார்பாக நிகர் நிலைப் பல்கலைக்கழகத் தகுதியோடு 5 நட்சத்திரத் தகுதிக் குறியீடும் A+ தர நிலையும் அடைந்ததோடு மறு அங்கீகாரமும் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 2018 – இல் வெளியிடப்பட்ட தேசியத் தர வரிசைக் கட்டமைப்பில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் வரிசையில் 79 – வது இடத்தைப் பிடித்த காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம், உலக அளவில் அறியப்படும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரை விமான நிலையத்திற்கு மிக அருகிலும் சிறுமலை மலைத்தொடரின் அடிவாரத்திலும் இயற்கை எழில் மிகுந்த கிராமமாக ஓடைகளுக்கிடையே விளங்குகிறது காந்திகிராமம்.

இளநிலை பாடப்பிரிவுகள்

B.Com. Cooperation (Hons) (8 Semesters)
B.B.A. (Hons) (8 Semesters)
B.A. Economics (Hons) (8 Semesters)
B.Sc. Mathematics (Hons) (8 Semesters)
B.Sc. Physics (Hons) (8 Semesters)
B.Sc. Chemistry (Hons) (8 Semesters)
B.Sc. Home Science (Hons) (8 Semesters)
B.Sc. Textiles and Fashion Design (Hons) (8 Semesters)
B.Sc. Geology (Hons) (8 Semesters)
B.Sc. Computer Science (Hons) (8 Semesters)
B.Sc. Microbiology (Hons) (8 Semesters)
B.Voc. Farm Equipments Operation and Maintenance
B.Voc. Footwear and Accessories Design
B.Voc. Renewable Energy
B.Voc. Multimedia Production Technology
B.Voc. Food Processing
B.Voc. Food Testing and Quality Evaluation
B.Voc. Dairy Production and Technology
B.Voc. Organic Agriculture and Enterprises Development
B.Tech., Civil Engineering (8 Semester) (AICTE Approved)
B.Sc. Agriculture (Hons) (8 Semester) (UGC Approved and ICAR pattern)
B.Sc. B.Ed. Mathematics (8 Semesters) (NCTE Approved)
B.Sc. B.Ed. Physics (8 Semesters) (NCTE Approved)
B.Sc. B.Ed. Chemistry (8 Semesters) (NCTE Approved)
B.Ed. (4 Semesters) (NCTE Approved)
ITEP – Secondary Stage B.Sc.B.Ed.(Physics/Chemistry/Mathematics)
B.A. (Hons) (8 Semester) in Demography and Development Studies
B.Sc. (Hons) (8 Semester) in Botany
B.P.E.S (Bachelor of Physical Education & Sports) (Hons) (8 Semester)
B.A. English (Hons) (8 Semester)
முதுகலைப் பாடப்பிரிவுகள்
M.A. Tamil and Indian Literature
M.A. Hindi
M.A. English and Communicative Studies
M.A. Rural Development Studies
M.A. Gandhian Studies and Peace Science
M.A. Economics
M.Com. Cooperative Management
M.Sc. Mathematics
M.Sc. Physics
M.Sc. Chemistry
M.Sc. Food Science and Nutrition
M.Sc. Home Science Extension and Communication
M.Sc. Textiles and Fashion Design
M.Sc. Botany
M.Sc. Zoology
M.Sc. Microbiology
M.Sc. Applied Geology and Geomatics
M.Sc. Geo informatics
M.Tech. Renewable Energy (AICTE approved)
M.C.A. (AICTE approved)
M.B.A. (AICTE approved)
M.Ed. (NCTE approved)
B.A. / M.A. Public Administration (5 Years Integrated-Ten semesters)
B.A. / M.A. Sociology (5 Years Integrated-Ten semesters)
M.A. Demography and Development Studies
முனைவர் பட்ட ஆய்வு படிப்புகள்
Ph.D. Tamil
Ph.D. Hindi
Ph.D. Malayalam
Ph.D. English and Foreign Languages
Ph.D. Rural Development
Ph.D. Geo informatics
Ph.D. Applied Research
Ph.D. Lifelong Learning and Extension
Ph.D. Political Science and Development Administration
Ph.D. Education
Ph.D. Gandhian Thought and Peace Science
Ph.D. Sociology
Ph.D. Future Studies
Ph.D. Rural Industries and Management
Ph.D. Economics
Ph.D. Cooperation
Ph.D. Mathematics
Ph.D. Physics
Ph.D. Chemistry
Ph.D. Biology
Ph.D. Home Science
Ph.D. Computer Science and Applications
Ph.D. Civil Engineering
Ph.D. Rural Energy
Ph.D. Applied Geology
Ph.D. Agriculture and Animal Sciences
Ph.D. Physical Education