
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 31
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம்,
1986 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006 – ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட – NIFT ACT மூலம் சட்டப்பூர்வ அந்தஸ்து பெற்ற தன்னாட்சி நிறுவனமாக விளங்குகிறது.
2022 – ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் புதிய Digital Disruptive Pattern Camouflage Uniform வடிவமைப்பில் இந்நிறுவனம் முக்கியப் பங்கு வகித்தது. NIFT என்பது ஆடை வடிவமைப்பு, Textile Technology, Fashion Communication, Accessory design, Fashion Management போன்ற துறைகளை உள்ளடக்கியது. சென்னை தரமணி உள்பட இந்தியாவில் 20 வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் துறையாகவும் Fashion Technology துறை விளங்குகிறது.
இளநிலைப் பாடப்பிரிவுகள்:
Bachelor of Design B.Des (4 ஆண்டுகள்)
1. B.Des.FD (Fashion Design)
2. B.Des.FC (Fashion Communication)
3. B.Des.TD (Textile Design)
4. B.Des.AD (Accessory Design)
5. B.Des.KD (knitwear Design)
6. B.Des.LD (Leather Design)
7. B.Des.FI (Fashion Interiors)
8. B.F.Tech (Fashion Technology)
முதுநிலை படிப்புகள்
1. M.Des-Master of Design
2. M.F.M Master of Fashion Management
3. M.F.Tech- Master of Fashion Technology
ஆராய்ச்சி படிப்புகள்
1. Ph.D -Full Time
2. Ph.D – Part Time
கல்வித் தகுதி
B.Des. படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி, B.F.Tech படிப்பிற்கு கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களைக் கொண்ட பிரிவில் தேர்ச்சி.
நுழைவுத் தேர்வு NIFT
Entrance Test (NTA) முதல் கட்டம்
1. CAT – Creative Ability Test (written)
2. GAT – General Ability Test (Computer based)
இரண்டாம் கட்டம்
முதல் கட்டத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் situation test நேரடித் தேர்வில் குறிப்பிட்ட சூழ்நிலையை கையாளுதல் குறித்த தேர்வு மற்றும் வடிவமைத்தல் தேர்வு நடைபெறும்.
இரண்டு கட்டத் தேர்விலும் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்குத் தர வரிசையின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படுகிறது.
நாடு முழுவதும் NIFT வளாகங்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புது தில்லி போன்ற பல நகரங்களிலும் உள்ளன.
வேலை வாய்ப்புகள்
1. Fashion Designer
2. Textile Designer
3. Accessory Designer
4. Fashion Communication
5. Fashion Merchandiser
6. Apparel Production
7. Fashion Technology
8. Entrepreneur/ Own Brand
ஃபேஷன் என்பதைவிட, NIFT என்பது சிறந்த எதிர்காலம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்கிற வாய்ப்பும் பெருநிறுவனங்களின் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. வடிவமைப்புகளையும் விருப்பமும் புதிய மாடல்களை சிந்திக்கவும் சர்வதேச தரத்தில் போட்டி போடவும் மிகச் சிறந்த தேர்வு NIFT.
இணையதள முகவரி : www.nift.ac.in
