உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 30
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்பது பாரத தேசம் என்ற பாடலில் மகாகவி பாரதியார் எழுதிய புகழ்பெற்ற வரிகள். வான்வெளி அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் மனித குலத்தின் ஈடுபாடும் தொலைநோக்குப் பார்வையும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நமது நாட்டில் தொல்காப்பியம், கணக்கதிகாரம் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களிலும், வேத நூல்களிலும், ஆரியபட்டியம் போன்ற வான் சாஸ்திரங்களிலும் வானியல் குறித்த குறிப்புகள் மிகுந்து இருக்கின்றன. மழை, புயல், வெப்பநிலை, வெள்ளம், காற்றழுத்தம், காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்து கணிக்கும் விஞ்ஞானத் துறையே Meteorology அல்லது Atmospheric Science எனப்படுகிறது.வான் தொழில்நுட்பம் படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட நிச்சய வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

வானியல் கல்விக்கு இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்

IIT Delhi
IIT Kharagpur
IIT Bhuvaneswar
IIST- Indian Institute of Space Science and Technology
IISc Bengaluru
Anna University
Cochin University
IITM Pune
IMD Training Institute ( Indian Meteorological Department)
இந்நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் முதுநிலை ஆராய்ச்சி படிப்புகள் இத்துறையில் வழங்கப்படுகின்றன.

இளநிலை பாடப்பிரிவுகள்

1. B.Sc., Meteorology
2. B.Sc., Atmospheric Science
3. B.Sc., Geography
4. B.Tech.,Geo Informatics
5. B.Tech., Atmospheric and climate Science
6. B.Sc., Physics

முதுகலைப் பாடப்பிரிவுகள்

1. M.Sc., Meteorology
2. M.Sc., Climate Change
3. M.Sc., Atmospheric Science
4. M.Tech Atmospheric Science
5. M.Tech.,Remote Sensing and GIS
6. M.Sc., Geo Physics