
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 31
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு NTA (National Testing Agency) என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது.
A – Ayurveda
Y – Yoga and Naturopathy
U – Unani
S – Siddha
H – Homeopathy
நீட் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிடுவதுடன் NTA வின் பணி நிறைவடைகிறது. தேசிய அளவில் MCC -Medical Counselling Committee ஆங்கில மருத்துவப் படிப்புகளான MBBS / BDS படிப்புகளுக்கு தேசியத் தரவரிசைப்படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக தனித் தேர்வுக் குழு, தமிழ்நாட்டில் உள்ள MBBS / BDS படிப்பிற்கும் B.Pharm உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
Ayurveda (BAMS), Yoga and Naturopathy (BNYS), Unani (BUMS), Siddha (BSMS), Homeopathy (BAMS) ஆகிய படிப்புகளுக்கு தேசிய அளவில் AACCC Ayush Admission Central Counselling Committee அமைப்பும், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனராகமும் ஆயூஷ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
Bachelor of Yoga and Naturopathy Science (BNYS) படிப்பிற்கு மட்டும் நீட் தேவை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவின் மதிப்பெண் கட் ஆப் முறையில் சேர்க்கை நடைபெறுகிறது.
மொத்தம் 56 கல்லூரிகளில் 4380 பாரம்பரிய இந்திய மருத்துவ அறிவியலிடங்கள் உள்ளன. அனைத்துப் பாடப்பிரிவுகளும் பயிற்சி ஓராண்டு சேர்த்து மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கால அளவு கொண்டவை.
1. BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery): மூலிகைகள், உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலைச் சமநிலைப்படுத்தும் ஆயுர்வேத மருத்துவ முறை.
2. BSMS (Bachelor of Siddha Medicine and Surgery): தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவ முறை. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கணிப்பது.
3. BHMS (Bachelor of Homeopathic Medicine and Surgery): உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி, நோயைக் குணப்படுத்துவது.ஹோமியோபதி மருத்துவ முறை.
4. BUMS (Bachelor of Unani Medicine and Surgery): பாரசீகம் மற்றும் அரேபிய மரபுகளைக் கொண்ட யுனானி மருத்துவ முறை.
5. BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences): மருந்துகளே இல்லாமல் இயற்கை எழில் மற்றும் யோகா கலை மூலம் உடலைப் பேணும் இயற்கை மருத்துவம்.
2026-27ம் கல்வி ஆண்டில் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி அரசு/சுயநிதிக் கல்லூரிகளில் மருத்துவ
இடங்கள் நிலவரம்
வரிசை எண் பாடப் பிரிவு அரசுக் கல்லூரி மொத்த இடங்கள் சுயநிதிக் கல்லூரி மொத்த இடங்கள்
1. BSMS 2 160 13 820
2. BAMS 1 60 5 270
3. BUMS 1 60 – –
4. BHMS 1 50 11 900
5. BNYS 2 160 20 1900
மொத்தம் 7 490 49 3890
