ஆளப் பிறந்தோம்
திரு.இள.தினேஷ் பகத்

ன் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

ரசு வேலைக்குப் போகணும்’’ என்கிற ஆசை நம் மனதில் மேலெழுந்தாலும் ‘‘அது எப்படிச் சாத்தியம்’’ என்கின்ற கேள்வி பின்னே வந்து அதைக் கீழே இழுக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்கிறவர்கள் ஒரு நாளில் 10-14 மணிநேரம் படிப்பு, அதன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகள் என்பதை எதிர்கொள்கிற வகையில் முறையான திட்டமிடல் (ம) நேர மேலாண்மைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தோல்விகள் என்பவை வெற்றிகளின் ஒரு பகுதி. அதனால், முயற்சியைக் கைவிடக்கூடாது. ஒன்று (அ) இரண்டு முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிடுவோம் என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்த முறையில் வெல்ல, குறுக்கு வழிகள் (Short Cut) ஏதும் கிடையாது. நீங்கள் தான் ஸ்மார்ட் ஆகவும், கடினமாகவும் படித்து முன்னேற வேண்டும்.

இந்த இதழில் பணம் அச்சடிக்கும் நிறுவனம், நாசிக்கில் 534 காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பல்வேறு பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு விதமான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு விபரம் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2026 ஆகும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க (ம) தேர்வு விபரம் பற்றி அறிய https://cnpnashik.spmcil.com என்ற இணைய தளத்தை பார்வையிடவும்.

வறுமையில் வாடும் பலருக்கு கல்வி என்பது பெரிய அளவிலான மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவுகள் இருக்கும். குடும்பச் சூழ்நிலை, வறுமை உள்ளிட்டவற்றின் காரணத்தினால் கனவை நிறைவேற்ற முயற்சி வைப்பதே சிரமமான காரியமாகிவிடும். அத்தகைய சூழலிலிருந்து ஐ.ஏ.எஸ். ஆன திரு. ஜெயகணேஷ் அவர்களின் வெற்றி கதையினைப் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம், வனவமங்கலம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ெஜயகணேஷ். இவரின் தந்தை 10 – ஆம் வகுப்பு வரை படித்து அந்தப் பகுதியில் உள்ள லெதர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். ெஜயகணேஷ்தான் மூத்தவர். குடும்பம் மிகவும் வறுமையான சூழலில் இருந்ததால், சீக்கிரம் படிப்பை முடித்துப் பணிக்குச் சென்றால், தந்தைக்கு உதவியாக இருக்கும் என எண்ணியவர் பாலிடெக்னிக் கல்லூரியில் Diploma சேர்ந்தார். 91% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற இவருக்கு தந்தை பெரியார் அரசு ெபாறியியல் கல்லூரியில் மெக்கானிக் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது.

2000 – ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர், வேலைத் தேடி பெங்களூருக்குச் சென்றார். அங்கு 2500 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அங்குதான் அவருக்கு இந்திய ஆட்சிப் பணி பற்றியும், ஐ.ஏ.எஸ். பணி பற்றியும் தெரிய வந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்தில் எத்தனை மாற்றங்கள் செய்ய முடியும் என உணர்ந்தார். அப்போது அவரின் ஊர் (ம) நண்பர்கள் பற்றிய சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.