
ஆளப் பிறந்தோம்
திரு.இள.தினேஷ் பகத்
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.
நம் அனைவருக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய மத்திய அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் எந்தப் போட்டி தேர்வினை எதிர்கொள்வது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது.
பெரும்பாலானோர் மாநிலத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மட்டுமே எழுதி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசின் துறைகள் (ம) அமைச்சகங்களில் கிடைக்கும் வேலைகளைப் பெற முன்வருவதில்லை.
‘ஆளுமைச் சிற்பி’ வாசகர்களுக்கு ஒரு செய்தியினைச் சொல்ல விழைகிறேன். 2027 – ஆம் ஆண்டு 8 – வது ஊதியக்குழு அமலில் வந்துவிடும். அதில் சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்கே ரூ.50,000/-க்கும் அதிகமாக சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டப் படிப்பை முடித்து இலட்சக்கணக்கான மாணவர்கள் வெளிவருகின்றனர்.
நாளுக்கு நாள் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களில் கடினத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. மேலும், அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால் அரசுக்கு நிதிச்சுமை அதிகம் ஏற்படுகிறது. எனவே, அதற்கு மாற்றாக பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் (Outsourcing) நியமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வருட முடிவுக்குள் ஏதேனும் ஒரு அரசுப் பணியில் சேர்ந்து சேவை செய்திட உங்களை வாழ்த்துகிறேன்.
மத்திய அரசு வேலையைத் ேதடும் மாணவர்களுக்கான SSC தேர்வு வாரியம் வாயிலாக கீழ்க்கண்ட தேர்வுகளை நடத்துகிறது.