
சாதனையாளர்கள் பக்கம்
– மதுரை ஆர்.கணேசன்
குழந்தைகளுக்கு அப்பா அம்மா அல்லது தாத்தா, பாட்டி போன்ற வலிமையான உறவுகளே உலகமாகத் தங்களையும் சேர்த்து மாற்றியிருப்பார்கள்..!
அந்த வகையில் பெரியவர்களின் மடியில் படுத்துக் கொண்டு கதைகேட்டுத் தூங்கிய குழந்தைகள் அதிஷ்டசாலிகள் என்று சொல்லலாம்..!!
அப்படிக் கதை கேட்ட குழந்தைகள் பிற்காலத்தில் ஒரு கதை சொல்லியாகவோ ? ஒரு ஓவியராகவோ? அல்லது ஒரு படைப்பாளராகவோ நிச்சயம் உருவா(க்)கி கலைத் துறையில் இன்றும் ஜொலிக்கிறார்கள்..!!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவி பா.லா.சாத்வீகா இங்குள்ள மேரி மாதா பொதுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார்.
சாத்வீகா தனது கதைக்களத்திற்கு தேவையான ஓவியங்கள் வரைவதும், வீட்டிலிருந்தே கதை சொல்லியாகவும் பரிணமிக்கின்ற வகையிலிலும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!
தமிழகத்தின் பிரபல கதை சொல்லி மற்றும் எழுத்தாளர், கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களது `லாலிபாப் சிறுவர் உலகம்’ அமைப்பில் இணைந்துள்ள சாத்வீகா 2025 – ஆம் ஆண்டில் “..மொச…மொச…முயல் குட்டி..” என்ற சிறுவர் கதைப் பாடல்கள் அடங்கிய தன்னுடைய முதல் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..!
ஓவியர், கதை சொல்லி, பரதநாட்டியக் கலைஞர் மற்றும் யோகாசனம், ஸ்கேட்டிங், செஸ், நீச்சல் வீராங்கனை, கீபோர்டு மற்றும் வளர்ந்து வரும் பேச்சாளர் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளதோடு சர்வதேச அளவில் பரதநாட்டியப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்..!
இனி நம்மோடு பா.லா.சாத்வீகா..,
“..எனது மூன்று வயதில் நடன நிகழ்ச்சிகளைப் பார்த்ததிலிருந்து அதில் ஆர்வம் வந்தது. மீண்டும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கப் பார்க்க அதில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. இதைப் பார்த்த எனது பெற்றோர்கள் என்னை நடனப் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.
அதன்பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றேன். எனது ஏழாவது வயதில் அகில இந்திய நடனப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன்.
பரதநாட்டியம், பாட்டு ஆகிய இரண்டும் சிறப்பாகக் கற்று வந்தேன். இதற்கிடையில் எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் முறையாகப் பயிற்சி எடுத்து அதன் மூலம் பல நல்ல கலை நயமிக்க ஓவியத்தை வரைந்து பலபோட்டிகளில் வெற்றி பெற்றேன்.
இதைக் கேள்விப்பட்டு சென்னையில் உள்ள கன்னி கோயில் ராஜா மாமா என்னை ஊக்கப்படுத்தி
“மொச மொச முயல் குட்டி” என்ற கதைப் புத்தகத்தை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், கதைகளுக்கு ஏற்ப சிறுவர் சிறுமிகளுக்கு தகுந்தபடி ஓவியம் வரைந்து புத்தாக்கம் செய்யப்பட்டது.