உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

ந்தியா, தோல் உற்பத்தி மற்றும் காலணி ஏற்றுமதியில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் காலணி, தோல் மற்றும் ஆபரணங்கள் துறையில், வடிவமைப்புத் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தில் உயர்கல்வி வழங்கும் ஒரு முன்னணிக் கல்வி நிறுவனமாக FDDI விளங்குகிறது. தொழில்துறைக்குத் தேவையான, தகுதியான, நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் இந்நிறுவனம் 1886 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்திய காலணி மற்றும் தோல் பொருள்கள் துறையில் நிலவிய திறன் இடைவெளியைக் குறைக்கவும் சர்வதேசத் தரத்திலான நிபுணர்களை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் FDDI சட்டம் 2017 – இன் படி இந்நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாகத் (Institution of National Importance) தகுதி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம் நொய்டாவில் FDDI தலைமையகம் அமைந்துள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, குஜராத், தமிழ்நாடு என 12 கிளைகள் இந்நிறுவனத்திற்கு உள்ளன.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் வளாகத்தில் 15 – ஏக்கர் பரப்பளவில் சர்வதேச சோதனை ஆய்வகம், உயர்தர கணிப்பொறி ஆய்வகம், வடிவமைப்புக் கூடங்கள் மற்றும் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகளுடன் தோல் ஆராய்ச்சி மற்றும் காலணி வடிவமைப்பு உற்பத்தி என்ற தனித்துவமான நோக்கத்தோடு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள்

1. B. Des.,(Footwear Design and Production)
2. B.Des., (Fashion Design)
3. B.Des.,
(Leather lifestyle and Product Design)
4. B.B.A., (Retail and Fashion Merchandise
Hons)
5. M.Des., (Footwear Design)
6. M.B.A., (Marketing and Management)
மாணவர் சேர்க்கை

 AIST (FDDI Entrance Exam ) All India selection test மூலம் இளங்கலைப் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. மே முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். Analytical Ability, Design, Aptitude, General Awareness, Comprehension and Grammar உள்ளிட்ட பாடப்பகுதிகளில் 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.

 CUET – (Common University Entrance Test) மொழி, விருப்பப்பாடம், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், காரணம் அறிதல், எண் திறன் ஆகியவற்றில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

 UCEED, (Undergraduate Common Entrance Exam For Design) பொதுவாக ஜனவரி மாதம் நடத்தப்படும் இத்தேர்வில் Part – A (Computer based : Numerical Aptitude Test, MSQ, MCQ) and Part – B (Offline: Drawing and Design, Aptitude) இடம்பெறும்.

மேற்கண்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று விண்ணப்பிக்கலாம்.