சாதனையாளர்கள் பக்கம்
– திரு.ப.திருமலை

மிழகத்தில் Genz – ன்னு வர்ணிக்கப்படுகிற இளையோர்களின் மாற்றம் சமீபத்தில் பார்க்க முடிந்தது; அதன் இன்னொரு பக்கத்தில் தமிழிசையிலும், ஆன்மிகத்திலும் மிளிர்கிற இளைஞர்களையும் கண்ணாரக் காணமுடிகிறது..!

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இர.தேவபிரசாத் எனும் இளைஞர் தேவாரப் பண்ணிசைப் பாடல்கள் பாடிப்பாடி தோய்ந்து பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொள்கிறார்..!

புதுச்சேரி மதகடிப்பட்டு, மணக்குள விநாயாகர் கல்லூரியில் ( SMVEC) 4 ஆண்டுகள் இளநிலை வேளாண்மை B.Sc.,(Hons) Agriculture படித்து முடித்திருக்கிறார்.

இவரை இர.தேவபிரசாத் என்பதை விட “..பண்ணிசைக் கலைஞன்னு..” சொன்னால் தான் எல்லாருக்கும் தெரிகிறது; இவர் பாடுகிற பண்ணிசைப் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார்.

இறைவன் குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு திருக்கோயில்களுக்கும் சென்று பாடுவதைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும், மனதை வருடிச்செல்கிறது..!
பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பண்ணிசை என்பது இசைத்தமிழ் மரபைக் குறிக்கும் “…பண்…” அடிப்படையில் சிவபெருமானைப் போற்றிப் பாடப்படும் பக்திப் பாடல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது..!

அதில் தேவாரம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகிய மூவரால் பாடப்பெற்றது..!

பன்னிரண்டு திருமுறைகள் கொண்ட பண்ணிசையில் முதல் ஏழு தொகுதிகள் அடங்கியது தான் தேவாரம். இதில் மொத்தம் 796 பதிகங்கள் 8284 பாடல்கள் தன்னகத்தே கொண்டுள்ளது..!
தேவராம் மற்றும் திருப்புகழ் முழுமையாகப் பாடும் திறமை கொண்ட இர.தேவபிரசாத் திருக்கோயில்கள் மற்றும் ஐம்பதுக்கும் மேலான பொது மேடைகளிலும் தனியாகக் கச்சேரிகள் நடத்திக் கொண்டு வருகிறார்..!