
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
CLRI – Central Leather Research Institute, Adyar, Chennai
CSIR – Council of Scientific and Industrial Research என்பது நவீன ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். CSIR, 1942 ல் தொடங்கப்பட்டு, தற்போது 37 தேசிய அளவிலான ஆய்வகங்கள், 39 களப்பணி மையங்கள், மூன்று புத்தாக்கக் கண்டுபிடிப்பு மையங்கள் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் முதன்மை நிறுவனமாகத் திகழ்கிறது. பாரதப் பிரதமர் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
வானியல், புவியியல், கடல்சார் அறிவியல், வேதிப்பொருட்கள், மருந்துகள், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் என அறிவியலின் அனைத்துத் துறை ஆராய்ச்சிக்காக CSIR, UGC- பல்கலைக்கழக மானியக்குழுவோடு இணைந்து CSIR -UGC NETஎன்னும் பேராசிரியர் பணிக்கான தேர்வும், JRF- Junior Research Fellow என்னும் இளநிலை ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கும் தேர்வினையும் நடத்துகிறது.
CLRI – சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், CSIR அமைப்பின் கீழ் செயல்படும் உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனமாக விளங்குகிறது. 1948-ல் தொடங்கப்பட்ட இந் நிறுவனம் காலணிகள், தோல் பொருட்கள், வேதியியல் ஆய்வு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆகிய அனைத்துத் துறை அறிவியலுக்கும் தொழில்நுட்ப ஆதரவினை வழங்குகிறது. சென்னை அடையாறில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக அமைந்துள்ள CLRI தனியாக பட்டங்களை வழங்குவதில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து CLRI இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
பட்டப்படிப்புகள்
1 . B.Tech., Leather Technology (4 years)
2. M.Tech, Leather Technology (2 years)
CLRI – முதுகலைப்பட்டயப் படிப்புகள்
1. Leather Goods and Accessories Design
2. Footwear technology
3. Leather Garments design
4. Leather processing Technology