
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 22
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
தேசிய வங்கி மேலாண்மைப் பயிற்சி நிறுவனம் (NIBM) என்ற தற்சார்பு பெற்ற உயர் கல்வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1969 – ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் தேசியமயமாக்கப்பட்ட மற்ற வங்கிகள், மத்திய அரசோடு ஆலோசித்து வங்கி மேலாண்மை, கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் அனைத்து வங்கித் தலைவர்களை உள்ளடக்கிய நிர்வாக குழுவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரை தலைவராக கொண்ட நிர்வாகக் குழு இந்த நிறுவனத்தை நடத்துகிறது.
Banking, Finance, FinTech, Data Analytics ஆகிய துறைகளில் இந்தியாவின் நம்பர் ஒன் Management Institute. இதில் இளநிலை பட்டப்படிப்புகள் இல்லை. முதுகலைப் பாடப் பிரிவுகள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக 150 சர்வதேசப் பயிற்சிகளை வளரும் உலக நாடுகளின் பங்கேற்பாளர்களோடு நடத்துகிறது. Banking sector-ல் பெரிய உயர்வு விரும்பும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த பாதையை இந்நிறுவனம் வழங்குகிறது.
NIBM-ல் வழங்கப்படும் முக்கியப் படிப்புகள்
PGDM – Banking & Financial Services (PGDM-BFS) (2 years / AICTE Approved)
கற்பிக்கப்படும் துறைகள்
1.Banking Management
2.Risk & Credit Management
3.Financial Technology (FinTech)
4.Investment Banking
5.Data Analytics
6.Digital Banking & Compliance
7.Financial Markets
இவை, இந்தியாவில் வங்கி வேலைகளில் மிக மதிப்புப் பெற்ற பயிற்சிகள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் இந்நிறுவனத்தில் சேரலாம்.
NIBM PGDM-க்கு செல்ல ஏதேனும் UG degree போதும் என்றாலும் பரிந்துரைக்கப்படும். பாடப்பிரிவுகளைக் கீழே காண்போம்.
இளங்கலைப் பாட பிரிவுகள்
1. B.Com (General / Banking /
Accounting / CA)
2. BBA,
3. BMS,
4. BA Economics,
5. B.Sc Statistics / Data Science,
6. B.E / B.Tech (any branch)