
சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன், மனஅழுத்தம், போதை வஸ்த்துக்களால் மானுடம் சிக்கித் தவிக்கிறது, இதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் விடுபட முடியுமென்பது பெரியோர்கள் கூற்றாகும்.
இளைய தலைமுறைகள் குறிப்பாக மாணவர்கள் கல்வியுடன், கலை, உடற்கல்வி போன்ற மாற்றுச் சிந்தனைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அப்படி ஓட்டப்பந்தயம், கபடி போன்ற பல விளையாட்டுக்கள் உடலாலும், அதேப்போல செஸ், கேரம் போன்ற பல விளையாட்டுக்கள் சிந்தனையாலும் மனதைச் சமப்படுத்துகின்றன..!
மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் அதில் “..அஸ்யூடு (ASUDE GAME) எனும் அறிவுசார் விளையாட்டு..” அனைத்துத் தரப்பினரிடமும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது..!
மதுரையைச் சேர்ந்த “..விளையாட்டு உளவியலாளர் உ.அப்துல் ரகுமான் (32), அஸ்யூடு..” எனும் புதிய சமூகச் சிந்தனை விளையாட்டைக் கண்டுபிடித்து இளைய தலைமுறையினர், பொது மக்கள் மற்றும் மாணவர்களிடமும் கொண்டு சேர்த்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்..!
முதலில் “..இந்த விளையாட்டைக் கண்டுபிடித்து 100 லெவல் முடிந்தவுடன் 2019-ஆம் ஆண்டில் ஒரு காப்புரிமையும், 1000 லெவல் முடிந்தவுடன் 2022 – ஆம்
ஆண்டில் மற்றறொரு காப்புரிமைக்காகவும் இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்து இரண்டு காப்புரிமைச் சான்றிதழ்களை..” அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..!
இதன் மூலம் கடந்த 10 வருடத்தில் மலேசியா, சிங்கப்பூர், லங்கா உள்பட மூன்றரை லட்சம் பொது மக்களிடம் இணைந்து விளையாடியிருக்கிறார்..!
இதில் 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள், 70 சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மாணவர்கள், 200 முதியவர்கள், 600 காவலர்கள் மற்றும் 50 திருமண உறவு சிக்கலில் உள்ள பெண்கள் உள்பட பலர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..!
அப்துல் ரகுமான் படித்த மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியிலேயே சமீபத்தில் “..BBA டிபார்ட்மெண்ட் துறையில் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இவரையும் இணைத்துக் கொண்டு கௌரவப்படுத்தியுள்ளார்கள்..!
“..மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியும் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்து மதுரையில் உள்ள அரசுப் பள்ளிகளில் அஸ்யூடு விளையாட்டை நடைமுறைப் படுத்துவதற்கு..” உத்தரவிட்டுள்ளார்..!
இவ்விளையாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் “..மதுரை மாவட்டக் கல்வி நிர்வாகம் மாநிலத் திட்டக்குழுவிற்கும்..” பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது..!
அஸ்யூடு லைப் ஸ்கூல், பவுண்டர், மதுரை உ. அப்துல் ரகுமான் இனி நம்மோடு…,
“..மதுரையில் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பொறந்து வளர்ந்தேன், நான் M.H.R.D., M.Sc.,psy., Sports psy.,படித்திருக்கிறேன் மேலும் படித்துக் கொண்டிருக்கிறேன், விளையாட்டு தொடர்பான உளவியல் ஆய்வுகளையும் செய்து வருகிறேன்.
அப்போது கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டு ஒரு கராத்தே பள்ளியில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தேன், வெறும் கராத்தே மட்டுமின்றி மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த நல்ல சிந்தனைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.
அந்த சமயத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களில் மாணவர்கள் அடிமையாகி அதில் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றன.
இதற்கு தீர்வு காண விளையாட்டு மூலமாக அவர்களுக்கு சமூக மாற்றத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்தேன், அதன் பலனாக ஆன்லைன் விளையாட்டுக்களில் மூழ்கி இருந்த சில மாணவர்கள் விடுபட்டனர்.
அதிலிருந்து கிடைத்த அனுபவம் தான் மாணவர்களிடம் புதிய விளையாட்டுக்களை உருவாக்க என்னுள் தாக்கமும், ஆர்வத்தையும் தூண்டியது.
2016 – ஆம் ஆண்டு காலத்திலேயே புதிய விளையாட்டுக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன், ஆனால் அதற்கு முழுமையாகப் பாதை வகுத்துக் கொடுத்தது “..கொரோனா காலம்..” பல்லாயிரக்கணக்காண மக்கள் அந்தத் நோய்த் தொற்றால் இறக்க நேரிட்டது.
வீடுகளில் பலர் உடன்பிறப்புக்களை இழந்து தவித்தார்கள், பலர் மனஅழுத்தத்தில் சிக்கிக் கொண்டார்கள், அதற்கெல்லாம் விடை கொடுக்கும் விதமாக “..அஸ்யூடு புதிய விளையாட்டை..” உருவாக்கினேன்.
“..அஸ்யூடு என்கிற ஜப்பானிய சொல்லுக்கு உலக தினம்..” என்று பொருள் ஆகும், இயற்கைக்கும், செயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டமே இவ்விளையாட்டின் கதைக்களமாகும்..!
உலகத்தின் இறுதி நாட்களில் ஒரு புறம் மனிதர்களும், மறுபுறம் மனிதர்களற்ற அனைத்து உயிரினங்களும் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக இடம் பெயரும் சூழ்நிலை வந்தால் என்னாகும் என்பதே இவ்விளையாட்டின் கருப்பொருளாகும்..!
மனிதர்களுக்காக விளையாடுபவர்கள், மனித பாத வடிவில் உள்ள காய்களையும், விலங்குகளுக்காக விளையாடுபவர்கள் விலங்கு பாத வடிவில் உள்ள காய்களையும் சேர்த்து இவ்விளையாட்டின் பலகைக் கட்டங்களில் வைத்து நகர்த்தி விளையாடுவது போன்றுள்ளது.
இதில் ஆயிரம் லெவல்கள் இருக்கிறது, எட்டுக் காய்கள் பயன்படுத்தப்படும், தலா ரெண்டு காய்கள் வெளியில் இருக்கும்.