ஆளப் பிறந்தோம்
திரு.இள.தினேஷ் பகத்

ன் இனிய சகோதர/சகோதரிகளுக்கு,

வணக்கம். நம்முடைய இலட்சியம், இலக்கு, கனவு யாவும் பெரிதாக இருந்தால்தான் விடாமுயற்சியோடு செயல் வடிவம் கொடுக்க முடியும். இதைத்தான் திருவள்ளுவர்,

‘‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’’  என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

இக்குறளுக்கான விளக்கம் : நாம் நினைப்பதெல்லாம் உயர்ந்த நிலைகளாக இருக்க வேண்டும். அந்த நிலை கூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது என்பதாகும்.
நமது தேடல் எப்போதும் பெரிதாக இருந்தால்தான் நாம் விரும்பியது (அரசுப் பணி) விரைவாகக் கிட்டும் என்பதை மனதில் நிறுத்துங்கள். இந்த இதழில் மிகவும் இளம்வயதிலேயே, திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு, கணவரால் கைவிடப்பட்ட சவிதா பிரதான் கவுர், I.A.S. அவர்களின் கதையைத்தான் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் வேலூரில் இயங்கிவரும் மத்திய அரசு கூட்டுறவு நிறுவனத்தில் தற்போது கீழ்க்கண்ட 48 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.

சித்த மருத்துவர்

காலியிடம் – 12

கல்வித்தகுதி – BSMS படித்திருக்க வேண்டும்

வயது – பொதுப் பிரிவினர் 22 வயதிலிருந்து 40 வயது வரையிலும், SC, ST பிரிவினர் 05 ஆண்டுகளும் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வுகள் ஆகும்.
ஆயுர்வேதிக் மருத்துவர்

காலியிடம் – 12

கல்வித்தகுதி – BAMS படித்திருக்க வேண்டும்
வயது – பொதுப் பிரிவினர் 22 வயதிலிருந்து 40 வயது வரையிலும், SC, ST பிரிவினர் 05 ஆண்டுகளும் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வுகள் ஆகும்.
ஹோமியோபதி மருத்துவர்

காலியிடம் – 12
கல்வித்தகுதி – BHMS படித்திருக்க வேண்டும்
வயது – பொதுப் பிரிவினர் 22 வயதிலிருந்து 40 வயது வரையிலும், SC, ST பிரிவினர் 05 ஆண்டுகளும் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வுகள் ஆகும்.
யோகா (ம) நேச்சுரோபதி மருத்துவர்

காலியிடம் – 12
கல்வித்தகுதி – BNYS படித்திருக்க வேண்டும்
வயது – பொதுப் பிரிவினர் 22 வயதிலிருந்து 40 வயது வரையிலும், SC, ST பிரிவினர் 05 ஆண்டுகளும் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வுகள் ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://simcoagri.com/image/main-slider/home-1/simco-application-2026 pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.

Managing Director South India
Multi-State Agriculture Co-operative Society Ltd.,
No.35, 1st West Cross Road,
Near Government Law College, Gandhi Nagar,
Silk Mill, Vellore – 632 006.