உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21

முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக உயர்வை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் மிக முக்கியமான துறையாகும். சுற்றுலா வளர்ந்தால் நாடு வளர்ச்சி பெறும். ஒரு பகுதியில் பாரம்பரியம், கலை, நடனம், உணவுப் பழக்கங்கள், திருவிழாக்கள், சடங்குகள் ஆகியவை உலகம் முழுதும் பரவவும் பாதுகாக்கப்படவும் சுற்றுலா உதவுகிறது. கலாச்சாரப் புரிதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுவதுடன் கைவினைப் பொருள்கள், உணவுகள், பாரம்பரியப் பொருட்கள் உள்ளிட்ட சிறு தொழில்கள் வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன.
சாலைகள், போக்குவரத்து, நீர், மின்சாரம், தொலைதொடர்பு வசதிகள், மேம்படுத்தப்படுவதால் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைகின்றன. இதன் பின்னணியில் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை உலகின் வளர்ந்து வரும் சேவைத் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் எந்த ஒரு பகுதியிலும் பயணிகளின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புகளும் வளர்ந்து வருகின்றன.
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையின் படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள் (3-6 மாதங்கள்)
1. Certificate in Tourism and Travel Management
2. Airfare and Airline Ticketing Certificate.
3. Professional Certification in Tourism and Travel Agency Management
4. Foundation Certificate Courses in Tourism
5. Certificate in Travel and Tourism Operations.
6. Tourism Marketing Certificate
இளநிலை பட்டப்படிப்புகள் (மூன்றாண்டுகள்)
1. B.B.A., Tourism and Travel Management
2. B.Sc., Tourism and Hospitality Management
3. B.A., Tourism Studies
4. B.B.A., Hospital and Tourism Management
5. B.Com.,Travel and Tourism Management
6. B.H.M., Hotel Management and Tourism
7. B.Sc., Aviation and Tourism
8. B.T.T.M., Bachelor of Tourism and Travel Management
முதுகலை பாடப்பிரிவுகள் (இரண்டு ஆண்டுகள்)
1. M.B.A., Tourism and Travel Management
2. M.A., Tourism and Administration
3. M.Sc., Hospitality and Tourism Management