சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களின் பங்கு அளப்பரியது..! அதே சமயம் கடவுளின் செல்லக் குழந்தைகள் எனப் போற்றப்படும் (Special Child) மாணவர்களின் சாதனைகள் அளவிட முடியாதது..!

அந்த வகையில் சிறுவயதிலேயே காது மற்றும் வாய் பேசமுடியாத பேட்மிட்டன் சாம்பியன் ஜெ.ஜெர்லின் அனிகா இந்தியாவிற்குப் பெருமை தேடித்தரும் விதமாகச் சுழன்று வலம் வருகிறார்..!!!

மதுரைப் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயரட்சகன், லீமாரோஸ் தம்பதியரின் மகள் ஜெர்லின் அனிகா லேடிடோக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர்.

தமிழக அரசு விளையாட்டுத் துறை சார்பாக விரைவில் இவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து முதன் முதலாக 13 – வயதிலேயே 2017 – ஆம் ஆண்டில் துருக்கியில் நடைபெற்ற உலக பேட்மிட்டன் போட்டியில்
5 – ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

2018 – ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டியில் இளம் வீரர்களுக்கான 21 – வயது பிரிவு, ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

2019 – ஆம் ஆண்டில் சீனா தைபே உலக காது கேளாதோருக்காண ஒலிம்பிக் போட்டியில் 1 -தங்கம் 2 – வெள்ளி 1 – வெண்கலம் பெற்றார்.

2021 – ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடந்த காது கேளாதோருக்காண போட்டியில் ஒற்றையர் பிரிவில் 1 – தங்கம் இரட்டையர் பிரிவில்

1 – தங்கம் மற்றும் குழு பிரிவில் 1 – தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.
2022 – ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டில் நடந்த ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டியில்3 – தங்கம் மற்றும் இதே ஆண்டில் பிரேசில் நாட்டில் நடை பெற்ற கோடைக்கால காது கேளாதோருக்காண ஒலிம்பிக் போட்டியில் 3 – தங்கம் உள்பட மொத்தம் 6 – தங்கம் வென்றுள்ளார்.

2023 – ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக காது கேளாதோருக்காண பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 1 – தங்கம் மற்றும் குழுப்பிரிவில் 1 – தங்கம் பெற்றார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்த செவித்திறன் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது விளையாட்டு அனுபவங்களைப் பாரதப் பிரதமர் மோடி அவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஜெர்லின் அனிகாவிற்கு பிரதமர் ரூ.75 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கிப் பராட்டினார்கள்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24 – ஆவது காது கேளாதோருக்காண ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஜெர்லின் அனிகாவை நேரில் அழைத்து பாராட்டி ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.