ஆளப் பிறந்தோம்-33
திரு.இள.தினேஷ் பகத்

ம்மால் பின்னோக்கிச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியாது. ஆனால் நாம் நினைத்தால் இன்றே புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். எந்தவொரு சவாலான பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு இருக்கும். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனையைக் கொடுக்கிறாய் கடவுளே? என்று புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

‘‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்’ – என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.

இப்பூமியில் மனிதப் பிறவி எடுத்துவிட்டால் துன்பங்கள் வந்தே தீரும். தொடர்ச்சியாக வரலாம். ஒரு சிலருக்கு விட்டுவிட்டும் வரலாம். வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்காமல் எந்தவொரு மனிதரும் முன்னேற்றம் அடைவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என் இனிய சகோதர/ சகோதரிகளுக்கு வணக்கம்.

வருகிற புத்தாண்டின் கொண்டாட்டமாக நமக்குக் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை, தோல்விகளை ஒரு பாடமாக ஏற்று நமக்கான வசந்தகால வாழ்வின் தொடக்கமாக எடுத்துக் கொள்வோம்.

அனைவருக்கும் எனது புது வருட நல்வாழ்த்துகள்.

இந்த இதழில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT)-யில் தற்போது காலியாக உள்ள 173 பணியிடங்களுக்கான அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. அத்தேர்வினைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் விடாமுயற்சியால் UPSC தேர்வில் வென்ற இளைஞர் ஒருவரின் கதையைத் தான் பார்க்க இருக்கிறோம்.