IIHT Indian institute of handloom Technology, Salem
மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் கைத்தறி மேம்பாட்டு ஆணையரின் நேரடி நிர்வாகத்தில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. சேலத்தில் Foulke’s Compund என்கிற 218 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயரின் வியாபாரக் குடியிருப்பாக அறியப்பட்ட சுற்றுச் சுவருடன் 40 ஏக்கர் பரப்பளவில் பசுமை போர்த்திய சுற்றுச்சூழல் கொண்ட வளாகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம் கைத்தறி தொழிற்சாலைகளில் உலகத்தரம் வாய்ந்த புடவை, வேஷ்டி, அங்க வஸ்திரம் ஆகியவை, பட்டு மற்றும் கைத்தறியினால் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சற்று ஏறக்குறைய 175 – நவீன நூற்பாலைகள், 75000 – ஆம் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு கைத்தறி நிறுவனங்கள் சேலத்தில் செயல்பட்டு வருகிறது. 1957 – இல் நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களை ஒருங்கிணைத்து நவீன தொழில்நுட்பத்துடன் நெசவுத் தொழிலை உயர்த்திட அகில இந்திய கைத்தறி வாரியம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1960 – இல் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களால் சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வந்த அரசு ஜவுளி நிறுவனம்,
இந்திய கைத்தறித் தொழில்நுட்பக் கழகமாக அதன் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களோடு சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1975 – இல் கைத்தறித் தொழிலின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி வலியுறுத்தப்பட்ட பிரதமரின் 20 அம்சத் திட்டங்களின் படி, புது தில்லியைத் தலைமை இடமாகக் கொண்டு கைத்தறி ஆணையர் அலுவலகம் தொடங்கப்பட்டது.
முன்னதாக 1960 – ஆம் ஆண்டு முதல் Diploma in Handloom and Textile Technology எனும் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 2015 -16 ஆம் கல்வியாண்டு முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக புது டெல்லி அகில இந்திய தொழில் நுட்ப இயக்கத்தின் AICTE ஒப்புதலோடு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று B.Tech., Handloom and Textile Technology என்னும் இளங்கலை தொழில் படிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் நேரடி ஆளுகையில் வாரணாசி (உத்திர பிரதேசம்) சேலம் (தமிழ்நாடு) கவுஹாத்தி (அஸ்ஸாம்) ஜோத்பூர் (ராஜஸ்தான்) பார்கா (ஒடிஸா) ஃபூலியா (மேற்கு வங்கம்) ஆகிய நிறுவனங்களும், கண்ணூர் (கேரளா) கட்டா (கர்நாடகா) வெங்கடகிரி (ஆந்திர பிரதேசம்) சம்பா (சட்டிஸ்கர்) ஆகிய நிறுவனங்கள் மாநில அரசின் ஆளுகையிலும் செயல்பட்டு வருகின்றன.
இளங்கலை மற்றும் பட்டயப் படிப்பு / பாடப்பிரிவுகள்
B.Tech, (Handloom and textile technology) மொத்த இடங்கள் 30
* Diploma in handloom Technology
* Post Diploma in Textile Processing
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.