ஊடகம் பழகு 14


திரு.மனோஜ் சித்தார்த்தன்

தற்கால ஊடகங்களின் நிலை
All India Television Consumption Growth BARC

Nielsen, அறிக்கையின் படி தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் அதிகமாக இருப்பதால், அது பார்வையாளர்களை எரிச்சலடையச் செய்கின்றது.சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சிகள் தொடரும் என்ற காலம் போய், இன்று சிறிய நிகழ்ச்சி இடைவேளைக்குப் பின்பு என்ற நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. ஆம், அந்த அளவிற்கு விளம்பரங்கள் மிக அதிகமாகி விட்டன.

முன்பெல்லாம் எப்போது நிகழ்ச்சிகள் வரும் என ஆவலாய்க் காத்திருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்த காலம் உண்டு. ஆனால் அந்த நிலை இன்று இல்லை. அன்றைய காலத்தில் ஒன்று ரெண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமே செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. அதனால் அவற்றைப் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள் இன்றைய நிலை அவ்வாறு இல்லை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும் செயற்கைக்கோள் பயன்பாட்டுக் கட்டணம் மிக அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திப்பதாகவும் கூறி, வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன. இதனால் ஒரு நிகழ்ச்சியையோ செய்திகளையோ பார்ப்பதற்குள் பல விளம்பரங்கள் மக்களை எரிச்சலடையச் செய்கின்றன. இதனால் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், பத்திரிக்கை காகித விலை மற்றும் மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தால் கடும் சிக்கலை அச்சு ஊடகங்கள் தற்போது சந்தித்து வருகின்றன. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.சில நிறுவனங்கள் மட்டும் மக்கள் சேவை ஆற்றி வருகின்றன, ஆம் சமூகத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களை வெளியிட்டு சேவையாற்றுவதும் மக்கள் சேவை தான். இதற்கு நல்ல உதாரணமாக நமது “ஆளுமைச் சிற்பி” மாத இதழ் சமூகப் பணியாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் தற்போது உள்ள காலத்தில் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சி அதிகரித்து இருந்தாலும், அவற்றிலும் பல பிரச்சினைகள் எழுந்து உள்ளன. நவீன உலகில், யூடியூப் (Youtube) போன்ற டிஜிட்டல் தளங்கள் ஏராளமானோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் பலர் வருவாய் ஈட்டி வருகின்றனர். இச்சூழ்நிலையில், யுடியூப் தனது கொள்கையில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது வரும் 15 – ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் விதிகளைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது என்ற தகவல்