ஊடகம் பழகு 14

திரு.மனோஜ் சித்தார்த்தன்  100

டகத்துறை என்பது தற்போது நன்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம். அதில் உள்ள வேலை வாய்ப்புகளே, ஆம் உண்மையில் ஊடகத்துறை ஆண்டு தோறும் அசுர வளர்ச்சி பெற்றுக் கொண்டே வருகின்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இத்துறைக்கென தனி மதிப்பு உருவாகி வருகின்றது. அதன் காரணமாகவே இத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கு பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் ஊடகத்துறை என்பது தொழில்நுட்பம் சார்ந்த, மற்றொன்று தொழில்நுட்பம் சாராத என இரு வகையாக பிரிக்கப்படுகின்றது. இது ஊடகங்களுக்கு இரண்டு கண்களைப் போன்றது ஆகும்.

இன்றைய காலங்களில் தொழில்நுட்பம் சார்ந்த ஊடகப் பணிகள் தொடர்பான ஆர்வங்கள் அனைவரிடமும் எழ ஆரம்பித்துள்ளன. அந்த அளவுக்கு தொழில்நுட்பங்கள் என்பது நம்மை ஆட்டிப் படைக்கின்றது. அந்த வகையில் எந்த வகை ஊடகமானாலும் அவற்றில் தொழில்நுட்பம் என்பது தற்போது மிக முக்கியமாக உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே மக்களிடத்தில் போய் சரியான முறையில் கொண்டு சேர்க்க முடியும் என்ற முடிவிற்கு ஊடக நிறுவனங்கள் வந்து விட்டனர். அந்த அளவுக்கு தொழில் நுட்பங்களும் மிக அபரிவிதமாக வளர்ந்து வேலையை மிக எளிதாக்குகின்றன. இதனால் இதனை கற்றுக்கொள்ளும் ஆர்வம் தற்போது மிக அதிகரித்துள்ளது. ஊடகத் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மையங்களும் தற்சமயம் மிக அதிகரித்துள்ளன. ஊடகத்துறையில் தொழில் நுட்பம் சாரா மற்ற பணிகளுக்கும் பயிற்சி மையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எப்படி நாளுக்கு நாள் ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அதற்கு ஏற்றால் போல பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

2025 – ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் ஊடகம் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறை என்பது இந்திய மதிப்பின்படி 2.7 ட்ரில்லியன் – ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் ஊடகம் மற்றும் அதனைச் சார்ந்த பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இதற்கேற்றாற் போல பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இது தொடர்பான படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. ஊடகங்கள் குறித்த அடிப்படைப் பயிற்சிகளிலிருந்து இறுதிவரை மிக விரிவான பயிற்சி என்பது அளிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்கால வாய்ப்புகள்

மத்தியக் கல்வி தொழில்நுட்ப நிறுவனம்
(Central Institute of Educational Technology – CIET) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (National Council of Educational Research and Training-NCERT) இது மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாகும். மத்திய உயர் கல்வித் துறை (Ministry of Education, Government of India), மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் (Ministry of Human Resources Development, Government of India) ஆகியவை இணைந்து இதனை நடத்துகின்றன. இந்நிறுவனங்களால், பள்ளி மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம் போன்றவை குறித்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. அதுவும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் சார்ந்தவற்றில் ஆர்வம் அதிகரிக்கிறது.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.