ஊடகம் பழகு 14


திரு.மனோஜ் சித்தார்த்தன்

ன்றைய அவசர உலகில் எல்லா வற்றுக்குமே போட்டி நிலவுகின்றது. போட்டியில்லாத துறையே இல்லை என்று சொல்லலாம் அதிலும் குறிப்பாக ஊடகத்துறையில் இன்று நிலவும் போட்டிகள் தான் ஊடகத்துறையினரை புருவத்தை உயர்த்தச் செய்கின்றது, ஆம் ஒரு ஊடகம் என்பது சிறப்பாகச் செயல்பட வருவாய் என்பது தேவை, அதனால் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.

போட்டிகளைச் சமாளிக்க என்னென்ன தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகின்றதோ அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துகின்றன இக்கால ஊடகங்கள். ஒவ்வொரு ஊடகமும் மக்களுக்கு என்ன தேவை எந்த மாதிரியான தகவல்களை, தரவுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதைப் பற்றி நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளன.

எந்த நேரத்தில் எந்தச் செய்தியை எவ்வாறு ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்பதைக் காட்சி ஊடகங்களும், இந்தச் செய்தியை எந்தப் பக்கத்தில் எவ்வாறு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று அச்சு ஊடகமும், பரபரப்புச் செய்தியை கூட பரபரப்பு இல்லாமல் இரவு பகல் பாராது மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் ஊடகங்களும் அனைத்து ஊடகங்களுக்கும், இடையே நீயா நானா என்ற ஆரோக்கியமான போட்டி நிலவுகின்றது.

இருந்த போதிலும் நாளுக்கு நாள் டிஜிட்டல் ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது, இவற்றை ஈடுகெட்ட மற்ற ஊடக நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக காட்சி ஊடகத்துறையில் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மிகத் துல்லிய அளவில் ஒளி ஒலி (Video & Audio) காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

இதற்கு மிகப்பெரிய தொழில் நுட்பக் கட்டமைப்புகளை (Technical Setup) மேற்கொண்டு வருகின்றன, இவற்றை நிர்வகிக்க தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களை நித்தம் நித்தம் பணி அமர்த்திக் கொண்டு வருகின்றன. இவ்வகைத் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மட்டுமல்ல கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியாளர்களைத் தற்சமயம் அதிக அளவில் பணியமர்த்தி வருகின்றன நிறுவனங்கள். இவ்வகையான பணிகளுக்கு நாம் எவ்வாறு செல்ல வேண்டும் அதற்கு நாம் என்னென்ன படித்து தெரிந்து இருக்க வேண்டும் என்பது குறித்துச் சற்று விரிவாக பார்ப்போம்.

ஊடகம் சார்ந்த பயிற்சிகள்

ஊடகம் சார்ந்த பயிற்சி முறைகளும் தொழில்நுட்ப யுத்திகளும் மிக அதிகம் உள்ளன. அது எந்த வகை ஊடகம் என்றாலும் சரி இவை குறித்த நுட்பங்களை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மிக எளிதாக ஊடகங்களில் பணியாற்ற முடியும். நாம் எதிர்பார்க்கின்ற சம்பளமும் கிடைக்கும்.
எனவே ஊடகங்கள் தொடர்பான பட்டப் படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

நமக்கு ஊடகத்துறையில் என்ன பிரிவில் விருப்பம் இருக்கின்றதோ அது சார்ந்த படிப்புகளை நாம் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.எப்பொழுதும் எந்த வகை ஊடகமானாலும் சரி தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு என்றுமே மதிப்பு எப்போதும் உண்டு. அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) பல்வேறு கல்லூரிகளில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் தனியாக கல்லூரி மற்றும் பயிற்சி நிறுவனங்களைக் கொண்டு உள்ளன. நிறங்கள் குறித்த (Color Theory RGB Colour RED-GREEN-BLUE, CMYK Colour Cyan-Magenta-Yellow-Black, Lab Colours) அடிப்படைப் புரிதல் இருந்தாலே அச்சு ஊடகங்களில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.அதன்படி அச்சு ஊடகங்களில் செய்திகளை வடிவமைப்பதற்கு Adobe Photoshop, Adobe Illustrator, Adobe Indesign, Coreldraw, Pagemaker போன்ற கணினி மென்பொருள்கள்(Computer Software) தேவைப்படுகின்றன.

இவற்றை நன்கு கற்றுக் கொள்பவர்களுக்கு அச்சு ஊடகங்களில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

பல்வேறு பயிற்சி மையங்கள் இது குறித்த பயிற்சிகளை வழங்குகின்றன. தமிழக அரசின் திறன் மேம்பாட்டு மையம் (Skill Development) மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இந்த மென்பொருள்கள் குறித்த இலவசப் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. Journalism எனப்படும் ஊடகம் சார்ந்த பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் அளிக்கப்படுகின்றன. Tamilnadu Skill Development Corporation TN Skills திறன் தமிழ்நாடு என்ற பெயரில் பல பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அதுவும் குறிப்பாக ஊடகங்களுக்குத் தேவையான Photography, Graphic Design, Video Editing, Journalism போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது, இந்தப் பயிற்சி முடித்தவுடன் தமிழக அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அதேபோல மத்திய அரசின் சார்பில் Ministry of Micro, Small and Medium Enterprises (MSME) Entrepreneurship and Skill Development Programme (ESDP) ஊடகங்கள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் YouTube Channel எவ்வாறு துவங்குவது, அவற்றை எவ்வாறு கையாள்வது, அதில் வீடியோக்களை எவ்வாறு பதிவிடுவது என்பது குறித்த பயிற்சிகள் தமிழகம் முழுவதிலும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சிகள் முடிந்த பின் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றைச் சரியாக நாம் பயன்படுத்தினால் ஊடக துறையில் நல்ல பயிற்சிகள் கிட்டும்.

ஊடகம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள்

Broadcast Engineer ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தின் இதயம் போன்றவர்கள். செயற்கைக்கோள் அலைவரிசை (Frequency), நெட்வொர்க் (Network), ஒளிபரப்பு (Telecasting) போன்றவை இவர்களின் தலையாயப் பணி. இவ்வகைப் பணியாளர்களுக்கு என்றுமே மதிப்பு இருக்கும். டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இதுகுறித்து படிப்புகளை படிப்பதற்கான வசதிகள் தற்போது உள்ளன.

Video Editors இதுவும் மிக முக்கியமான ஒன்று. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அதன்படி FCP (Finnal Cut Pro), பெரும்பாலான தொலைக்காட்சிகளில் படத்தொகுப்பிற்கு (Video Editing) இவற்றை தான் பயன்படுத்துகின்றார்கள். பெரும்பாலான பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகளில் இந்த மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆப்பிள்(Apple) நிறுவனத்தின் இந்த ஒரு மென்பொருள் தற்போது மிக வரவேற்பு பெற்றுள்ளது, மேலும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்து திரைப்படத் தயாரிப்பு, விளம்பர நிறுவனங்கள் போன்றவை இந்த மென்பொருளைப் பயன்படுத்துகின்றன.

Apple Mac Device-Apple Computer, Apple Laptops, Apple Tablets இல் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும், மற்ற சாதாரண Windows Computers, Android Device போன்றவற்றில் இவற்றைப் பயன்படுத்த முடியாது.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.