ஊடகம் பழகு 13

திரு.மனோஜ் சித்தார்த்தன்

80-களின் துவக்க காலத்தில் தரைவழித் தொலைபேசிச் சேவை(Land Line)என்பது மிக உச்சத்தில் இருந்தது. பெரும் செல்வந்தர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் இதில் இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தி வந்தார்கள், காலத்தின் பரிமாண வளர்ச்சி காரணமாக அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துவித சாமானிய மக்களும் இதனை வாங்கிப் பயன்படுத்தினர். கிராமங்கள் தோறும் தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது. இது துரிதத் தகவல் தொடர்பிற்கு வித்திட்டது. அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு கம்பியில்லாத் தொலைபேசிச் சேவை (Wireless Telephone) மற்றும் அதன் அடுத்த கட்ட நகர்வாய் மொபைல் தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கின முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை (1G, 2G, 3G,.. 5G) என படிப்படியாக சென்று தற்போது ஐந்தாம் தலைமுறை மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றோம்.

அது மேலும் வளர்ச்சி அடைந்து தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட மொபைல் தொழில்நுட்பங்கள் இன்று பொழுதுபோக்குச் சாதனங்களாக ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்களாக (Multimedia Device)மாறி உள்ளது. இந்த மொபைல் போன்  மூலம் இணையத்தைப் பயன்படுத்துவது மிக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் இணையம் என்பது மிக அதிகப்படியான விலையில் சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையம் என்பது அனைத்துப் பொதுமக்களும் மிக சாதாரணமாக பயன்படுத்தும் ஒன்றாகத் தற்போது மாறி உள்ளது. இதற்கெல்லாம் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியே. நம் கையில் வைத்துள்ள மொபைல் போன் மூலமாகவே பெரும்பாலான மக்கள் இணையத்தை பயன்படுத்துவதால் அதன் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது மிக விரைவாக நடைபெறுகின்றது.

இதன் மூலம் பலதரப்பட்ட செயல்களைச் செய்ய முடியும் என்பதால் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில் மிக ஆர்வம் காட்டுவதால் நிகழ்வுகள் மற்றும் தேவைகளை ஒருவருக்கொருவர் மிக எளிதாகப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது. எனக்குத் தெரிந்த செய்தியை, என் கண் முன்னால் நடந்த நிகழ்வை நான் எனக்குத் தெரிந்தவர்களுக்கு உடனடியாக அனுப்புகின்றேன், அவர் அவருக்கு  தெரிந்தவருக்கு அனுப்புவார் இவ்வாறுதான் செய்திகள் என்பது இன்று பரவுகின்றன. இந்த நடைமுறை தான் டிஜிட்டல் ஊடகங்கள் எனப்படுகின்றன. இது உலக அளவில் மிகுந்த கவனம் பெறுகின்றது.

அசுர வளர்ச்சியில் டிஜிட்டல் ஊடகங்கள்

இக்கால இளைஞர்கள் பெரும்பாலானோர் இவ்வகையான ஊடகங்களையே பயன்படுத்துகின்றனர். 18 – வயது முதல் 30 – வயதிற்குள் இருக்கும் பெரும்பாலான மக்களின் தேர்வு இவ்வகை ஊடகங்களாக இருக்கின்றது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரப்பினால் மட்டுமே செய்திகள் சரியாக முறையில் சென்று சேரும் என்பதில் இவ்வயதினர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். WANP(World Association of News Publishers) இந்த நிறுவனம் கடந்த 2009 – ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து ஊடகங்கள் மற்றும் அதில் வெளியாகும் செய்திகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி டிஜிட்டல் மீடியா சமீபத்தில் ஒரு மாநாட்டினை மும்பையில் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளது. 

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.