ஊடகம் பழகு 08
திரு.மனோஜ் சித்தார்த்தன்
ஊடகங்கள் என்றால் என்ன? என்பது குறித்து யாருக்கும் விளக்கம் தேவைப்படாது. ஆம், ஊடகங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? என்பதைப் பற்றி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்ததே.
அதிலும் குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்கள் என்பது தற்காலத்தில் மிகப் பிரபலம் அடைந்து வருகின்றது. டிஜிட்டல் ஊடகங்கள் குறித்துப் பலருக்கும் பல வகையான சந்தேகங்கள் எழலாம். டிஜிட்டல் ஊடகங்களா அப்படி என்றால் என்ன? அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் 365 நாட்களும் 24×7 என்ற கணக்கில் மக்களுக்கு செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும்போது ஏன் இந்த டிஜிட்டல் ஊடகங்கள் நமக்கு தேவைப்படுகின்றன, என்பதை நாம் ஆராய வேண்டி உள்ளது.
ஆம், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் எந்தச் செய்தியை முதன்மையாக்க வேண்டும் எந்தச் செய்தியை முதன்மையாக்கக் கூடாது என்பது தொடங்கி, நடுநிலை தவறி ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமாகவும் செய்திகளை வழங்குவது தான் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் என்ற குற்றச்சாட்டு மக்களால் வைக்கப்படுகின்றது.அதனைப் போக்கவும் காலத்திற்கேற்ற மாற்றமாய் இணையத்தின் அசுர வளர்ச்சியாய் தற்போது வந்தது தான் இந்த டிஜிட்டல் ஊடகங்கள். சிலர் சமூக வலைதளங்களைத் தான் டிஜிட்டல் ஊடகங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் உண்மை என்ன? இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
வலைதளங்களுக்கும், டிஜிட்டல் ஊடகங்களுக்கும் உள்ள வேறுபாடு
சமூக வலைதளங்கள் என்பது துவங்கப்பட்டதன் நோக்கம் நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கும், தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்வதற்கும் (chating)தான் முதல் முதலில் துவங்கப்பட்டன. அதுவும் குறிப்பாக பிறந்தநாள், திருமண நாள், பண்டிகைக் கால விசேஷங்கள் காலத்தில் இதன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். துவக்கத்தில் இவ்வாறு இருந்த நிலையில் அதன் பரிமாண வளர்ச்சியால் சமூக வலைதளங்கள் மூலம் இயங்கும் டிஜிட்டல் ஊடகங்கள் என்பது அறிமுகமானது.
ஆம், சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பித்து அதனுள் சென்று நமக்கான டிஜிட்டல் ஊடகங்களை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு உருவாக்குவது தான் டிஜிட்டல் ஊடகமாகும். நமது சமூக வலைதளக் கணக்கு என்பது வேறு, டிஜிட்டல் ஊடகக் கணக்கு என்பது வேறு. ஆனால், நமது சமூக வலைதளத்தின் கணக்கு மூலம் தான் டிஜிட்டல் ஊடகங்கள் இயங்கும். இதன் பார்வையாளர்களாக சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் இருப்பார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் பேஸ்புக் கணக்கு ஒன்றினை ஆரம்பித்து அதனுள் சென்று பேஸ்புக் பேஜ் (Facebook Page) என்பதைத் தேர்ந்தெடுத்து நமக்கான டிஜிட்டல் ஊடகங்களை துவக்கிக் கொள்ளலாம்.
அதில் வீடியோக்கள், போட்டோக்கள், தகவல்கள் போன்றவற்றைப் பதிவிடலாம். இதனால் புதியவர்களுக்கு நமது ஊடகத்தைக் காட்டி நமது பக்கத்தை பாலோ (Follow) செய்வதன் மூலம் நமக்கு வருவாய் என்பது வருகின்றது.
அதே போலத் தான் இன்ஸ்டாகிராம் கணக்கிலும், கிரியேட்டர் கணக்கு (Creater Account) என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் நமது வீடியோக்களைப் பதிவிட்டால் மட்டும் தான், நமது வீடியோக்கள் புதியவர்களுக்கு போய் சேரும்.
அதன் மூலம் நமக்கு வருவாய் கிடைக்கும். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஆனால் சமூக வலைதளக் கணக்கு என்பது நாம் நமது நண்பர்கள் மட்டும்தான் பார்க்க முடியும். நம்மைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நமது சமூக வலைதள கணக்குப் பற்றி தெரியாது ஆனால், இந்த டிஜிட்டல் ஊடகங்களாக நாம் சமூக வலைதள கணக்கைப் பகிரும் போது புதியவர்களுக்கு நமது வீடியோ சென்று சேருகிறது இதனால் நமக்கும் பெருமை கிடைக்கின்றது, வருவாயும் கிடைக்கின்றது. இதுதான் சமூக வலைதளங்களுக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் உள்ள வேறுபாடு. பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் தேர்வு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகத்தான் இருக்கின்றது.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.