ஊடகம் பழகு 06

திரு.மனோஜ் சித்தார்த்தன்

டேங்கப்பா என்ன டெக்னாலஜிப்பா இதனால உலகமே இன்று சுருங்கிப் போச்சு’’ என்று சொல்லும் அளவிற்கு இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சியாக இருக்கிறது. இதன் காரணமாக தொழில்துறை வெற்றிப்பாதையில் செல்கின்றது என்றால் அதற்கு தொழில்நுட்பம் தான்  முதல் காரணம். ‘‘இந்தக் காலத்துல மாதிரி அந்த காலத்துல இருந்திருந்தா நாங்க எங்கேயோ போயிருப்போம்பா’’ என வெறுப்படைவர்கள் பலர் நம்மில் உள்ளனர். அந்த அளவிற்கு வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிப் போய் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் ஊடகத்துறையிலும் புதிய தொழில்நுட்பங்களாக அறிமுகம் ஆகி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

 தற்போதுள்ள ஊடக நிறுவனங்கள்

குறிப்பாக ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள்(Media Office and Administration & Processing), செய்தி சேகரிப்பு (News Gathering Techniques), நேரடி ஒளிபரப்பு (Live Telecast), படத்தொகுப்பு மற்றும் காட்சி அமைப்பு (Photos and Video Editing), வரைகலை (Computer Graphics), ஒலி மற்றும் ஒளி துல்லிய ஒளிபரப்பு (High definition Audio and Video Telecast) போன்றவற்றில் தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகி, இன்று காட்சி ஊடகத்துறையை மக்கள் மனதில் முன்னிலை பட வைக்கின்றது. மற்ற ஊடகங்களைக் காட்டிலும் காட்சி ஊடகத்துறையில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. முன்னொரு காலத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தடங்கல் ஏற்பட்டுள்ளது தடங்கலுக்கு வருந்துகிறோம் என வரும். அதுவும் குறிப்பாக மழை மற்றும் புயல் காலங்களில் இவை அடிக்கடி வரும். இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளிப்பதில் சிக்கல்கள் பல ஏற்பட்டன,

இதையெல்லாம் சரி செய்து இன்று மிகத் துல்லிய அளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய தனி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கு  துல்லியமான ஒளி ஒலி காட்சிகளை தற்போது தரும் வசதி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும்  தனது பங்கிற்கு நிகழ்ச்சிகளைத் தந்து மக்களிடத்தில் நம்பிக்கையை பெற்றுள்ளன. இதற்குக் காரணம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை மட்டுமே சொல்ல முடியும். ஆம், தொழில்நுட்பத்தால் மட்டுமே இது சாத்தியம். ‘‘சாத்தியப்படாததை சாத்தியப்படுத்துவதே தொழில்நுட்பத்தின் முதல் வேலை’’.

 அந்தக் காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகப் பெரிய அளவில் இருந்தன. அதாவது CRT எனப்படும் (Cathode Ray Tube) ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தொலைக்காட்சி பெட்டிகளின் அளவில் குறைந்து இன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவிலான தொலைக்காட்சி சாதனங்கள் தற்சமயம் வந்துவிட்டன. LCD (Liquid-Crystal Display),LED (Light Emitting Diode), LED Plasma, OLED (Organic light-emitting diodes) QLED (Quantum light-emitting diode) என இன்னும் புதிய பல தொலைக்காட்சி சாதனங்கள் தற்சமயம் வந்து விட்டன. அதேபோல இன்னும் புதிய சாதனைகள் வர இருக்கின்றன. எனவே, தொலைக்காட்சிச் சாதனங்களுக்கு ஏற்ப ஒளிபரப்பு முறையிலும் மாற்றங்கள் தேவைப்பட்டன. அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் பல மாற்றங்கள் வந்துவிட்டன.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.