கற்றல் எளிது -07

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

சாண்டியாகோ பதினோரு வயது சிறுவன். பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டான். அவனைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சாண்டியாகோவிற்குப் படிப்பது என்றால் பிடிக்காது. படிப்பு சுட்டுப்போட்டாலும் வராது. அதனால் அவனை எப்போதும் படிக்கச் சொல்லி நச்சரிக்கும் தந்தையை வெறுத்தான். பள்ளி ஆசிரியர்களிடம் தொடர்ந்து சண்டையிட்டான்.

பள்ளி நிர்வாகம் அவனைப் பள்ளியை விட்டு நீக்கியது. ஒரு முறை, இரு முறை அல்ல. பல முறை. அவன் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டான். ஒருமுறை வீட்டிலேயே பீரங்கிபோல ஒன்றைச் செய்து எதிர்வீட்டுக் கதவை உடைத்துவிட்டான்.

சாண்டியாகோ பள்ளியை வெறுத்ததற்கு காரணம், அவனுக்கு கூரிய நினைவாற்றல் கிடையாது. எல்லாவற்றையும் கேட்டவுடனேயே மறந்துவிடுவான். அதனால் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவனால் சுத்தமாகப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக அவனுக்கு கணிதம் என்றால் கசக்கும். புரியவே புரியாது.

அவனுக்குப் பிடித்த ஒரே விஷயம் படம் வரைவது. பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது இவன் மட்டும் நோட்டில் விதவிதமான படங்களை கிறுக்கிக்கொண்டிருப்பான். ஆனால், இவனது தந்தைக்கு மகன் படம் வரைவதில் விருப்பம் இல்லை. படம் வரைவதால் பாஸ் ஆக முடியுமா? படம் வரைவது வாழ்க்கைக்கு உதவுமா?இதுதான் அவரது கேள்வி.

தந்தைக்கு கவலையாக இருந்தது. சாண்டியாகோவால் எதையும் வேகமாக கற்றுக்கொள்ளவும் முடியவில்லை,ஞாபக சக்தியும் சுத்தமாக இல்லை,பள்ளி முழுவதுமே மக்கு என்று அழைக்கப்படும் என் பையன் எதிர்காலத்தில் என்ன ஆவான்?

முப்பது வருடங்கள் கழித்து 1906 – ஆம் ஆண்டுசாண்டியாகோ மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார். அதுமட்டுல்ல, நவீன நரம்பியல் துறையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்!

ஆம் சிறுவயதில் படிப்பு வராத சாண்டியாகோதான் பல சாதனைகள் படைத்த விஞ்ஞானியானார். ஒரு மக்கு குழந்தையால் எப்படிச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக ஆக முடிந்தது?

மூளை வளர்ச்சியே இல்லாத குழந்தை என்று பள்ளிக்கூடங்களால் துரத்தப்பட்ட ஒரு குழந்தையால் எப்படி மூளை அமைப்பினை ஆய்வு செய்வதில் முன்னோடியாக திகழ முடிந்தது? இதைப்பற்றியும், அவரது அற்புதமான ஒரு கண்டுப்பிடிப்பு பற்றியும்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். அவரது அந்தக் கண்டுப்பிடிப்பு நாம் கற்கும்போது நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள நமக்கு உதவுகிறது.

நரம்பணு ஏலியன் நண்பர்கள்…

மனித உடலின் மிக முக்கியமான பாகம் மூளை. நம் உடல் இயங்குவதற்கும் நாம் சிந்திப்பதற்கும் அளப்பறிய பங்காற்றுகிறது மூளை. நமது மூளையில் எக்கச்சக்கமான நரம்பணுக்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை நியூரான்கள் (Neurons) என அழைக்கின்றனர்.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.