ஊடகம் பழகு 06

திரு.மனோஜ் சித்தார்த்தன்

செய்தி தொலைக்காட்சிகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது, என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Council of Communication and Resarch Foundation என்ற புதுடெல்லியை சார்ந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஏனென்றால் அச்சு ஊடகத்தில்  ஒரு செய்தியை எந்த அளவுக்கு மிகைப்படுத்தி எழுத முடியுமோ அந்த அளவுக்கு எழுதலாம், ஆனால் தொலைக்காட்சி என்பது அப்படி அல்ல, ஒரு நிகழ்வு குறித்து செய்தி வெளியிட வேண்டும் என்றால் அதற்கான வீடியோக் காட்சிகள்  செய்தியின் ஆதாரத்துடன் வெளியிடப்படும். எனவே, காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரையில் கதை, கற்பனைகளுக்கு எல்லாம் இங்கே வேலையில்லை. மிகைபடுத்த முடியாது, இதனால் மக்கள் மனதில் இவற்றிற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் செய்திகளை மக்களுக்கு நன்கு புரியும் வகையில், படக்காட்சிகளாக நேர்த்தியாக தேர்ந்தெடுத்து மிகக்  கவனத்துடன் ஒளிபரப்பு செய்வார்கள். இதனால் மக்களுக்கு அதனைப் பற்றிய தகவல்கள் எளிதில் புரிகின்றது. இதன் காரணமாகவே, இன்றும்  குடும்பத்துடன் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாகப் பார்க்கும் வழக்கம் என்பது தொடர்ந்து இருந்து வருகின்றது, மக்கள் ஏன் செய்தித் தொலைக்காட்சிகளின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால், ஓரிடத்தில் நிகழும்  நிகழ்வுகளை நேரலையாக (Live Telecost), பல்வேறு செய்தியார்களை வைத்து தகவல் திரட்டி, பல்வேறு புதிய தகவலுடன்வழங்குவது இதன் இயல்பு. இதனால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக, தேர்தல் மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்வுகளை துல்லியமாக வழங்குவதால் இதற்கு? வரவேற்பு அதிகரித்துள்ளது.

செய்தித் தொலைக்காட்சிகளுக்கான தனித்துவமான நிகழ்ச்சியாக என்றால் அரசியல் விவாதங்கள் (Political Debate) உள்ளன. தற்சமயம் உள்ள அரசியல் நிகழ்வுகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இவை இருக்கின்றது. மேலும், அதிகப்படியான பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு இருக்கின்றனர். தற்கால அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் விவாதத்துக்கான தலைப்பினைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் பங்கேற்கும்விருந்தினர்கள் அவரவர் கருத்துக்களைக் கூற, நெறியாளர் அவர்கள் இந்த நிகழ்ச்சியினை வழி நடத்திச் செல்கிறார்.

மேலும்  பரபரப்பான ஒரு வார்த்தையாக இருப்பது Exiting poll என்று சொல்லக்கூடிய தேர்தல் கருத்துக்கணிப்புகள்.  யார் ஜெயிப்பார், யார் எவ்வளவு வாக்கு வாங்குவர்  என்பது குறித்து தகவல்களை திரட்டி பல செய்தி நிறுவனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும், உண்டு பண்ணுகின்றன, பல கோடி மக்கள் இதில் ஒளிபரப்பாகும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்பி தங்களுக்குள்  விவாதம் செய்து கொள்ளும் நிலை, தற்சமயம் கள நிலவரம் என்பது தொலைக்காட்சிகளின் கையில் தான் உள்ளது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.