ஊடகம் பழகு 05

திரு.மனோஜ் சித்தார்த்தன்

பகுதி 1

இந்தியாவில் விடுதலை வேள்வி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலமது. சுதந்திரக் காற்றை அனுபவிக்காமல் எத்தனை நாள் அடிமைப்பட்டுக் கிடப்பது என ஆங்கிலேயருக்கு எதிராய் நாடெங்கிலும் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. எங்கு என்னென்ன பிரச்சினை நடக்கிறது, யார் யாரெல்லாம் கலந்து கொள்கின்றனர் போன்ற தகவல்களை மக்கள் திரட்ட ஆரம்பித்தனர். தகவல்களைப் பெறுவதற்கு மக்கள் ஆர்வம் கொண்டனர், இதுவே பின்னாளில் பொது மக்களுக்குச் செய்திகளைப் படிப்பதற்கும் மற்றும் கேட்பதற்கும் ஆர்வம் வந்ததற்கான முதல் காரணமாகும்.  இன்று செய்தி என்பது பல பரிமாணங்களை எடுத்தாலும்,  தேவைகள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

செய்தி என்பது  மக்களுக்கு புதிய அறிவினை ஊட்டும் வகையில் தன்னை புதுப்பித்துக் கொள்ள முக்கியக் காரணமாக அமைகிறது ஆங்கிலத்தில் செய்தி என்ற சொல் (NEWS) புதியது என்ற பொருளையும் எழுத்தின் வழி நோக்குகையில் நான்கு திசைகளில் இருந்து செய்திகளைத் திரட்டுவது என்ற பொருளையும் தருகின்றது. அக்காலத்தில் செய்திகள் என்பது குறிப்பிட்ட ஒரு சில தகவல்களைப் பரப்பும் கருவியாக மட்டுமே இருந்தது, அது காலத்துக்கு ஏற்றது போல் மாற்றம் கண்டு செய்திகளில் பரிமாண வளர்ச்சி ஏற்பட்டு நடப்பு நிகழ்வுகள், அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், பக்தி, உலகச் செய்திகள் என செய்திகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

செய்திகளின் முக்கியத்துவம்

உலகில் ஒவ்வொரு நொடியும் பல சம்பவங்கள் நடக்கின்றன. அவ்வாறு நடக்கும் சம்பவங்கள் மற்றும் அது குறித்த தகவல்கள் மற்றும் உலக நிகழ்வுகள் போன்றவை  விரைவாகவும் உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் நடப்பது நடந்ததை பற்றிய கள நிலவரத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனடியாகவும் தெரியப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இவற்றின் அத்தியாவசிய பணி. ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வினை  மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த செய்திகள் தான். செய்தி என்பது எந்த அளவிற்கு மக்களைச் சென்று சேர்கின்றது என்பதனைப் பொறுத்து தான் எந்த வகையான செய்தித் தளங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.