திரு.மனோஜ் சித்தார்த்தன்

ஊடகம் பழகு 02

ண்டவனின் படைப்பில் அதிசயத் திற்குரிய படைப்பு மனிதன். ஆம், அவனில் இருக்கும் ஆற்றல்கள் சக்தி, பண்பு நலன்கள், கற்பனை வளம் போன்றவை வியக்கும் விந்தைகளாக உள்ளன. இந்த வகையில் மனிதனின் படைப்புகளில் அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது தொடர்புகளை சுலபமாக்கி, காலத்தைச் சுருக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து வான்வெளிகளும் செய்யும் சாதனைகள் என்பது மிகப்பெரியது, உலகினை கைக்குள் அடக்கி உறவுகளை வளர்க்கும் நிலை என்பது மகத்தானது. தகவல் தொடர்பு என்பது செய்திகள் மற்றும் கருத்துக்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறுவதுதான் இதன் நோக்கம்.

இதன் பரிமாண வளர்ச்சியே ஊடகங்கள். அரசியல் தாக்கங்கள் துவங்கி, தமிழ் நடிகைக்கு பிறந்த இரட்டை குழந்தை வரை, எப்போதும் மக்களைப் பரபரப்பாக வைத்திருக்கும் சக்தி ஊடகத்துக்கு மட்டுமே உண்டு. தினந்தோறும் புதிய செய்திகள், கள நிலவரம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து அதைப் பற்றி மக்களை அசை போட வைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. உள்ளூர் செய்தி முதல், உலக நடப்பு வரை மக்களிடம் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வைப்பதில் ஊடகங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

ஊடகம் அறிமுகம்

காலை எழுந்தவுடன் காபி உடன், காலை நாளிதழ் உடன் காலைப் பொழுதினை ஆரம்பிப்பது என்பது நம்மில் பலருக்கு இன்னும் வழக்கமாக உள்ளது. அடுத்து வானொலில் “வணக்கம் ஆல் இந்தியா ரேடியோ செய்திகள் வாசிப்பது.” என்பதில் துவங்கி தொலைக்காட்சிகளில் “இன்றைய தலைப்புச் செய்திகள்”, “முக்கிய செய்திகள்.” என்பது வரையும், இணையத்தில் “ஹலோ பிரண்ட்ஸ் துவங்கி! வணக்கம் டா மாப்ள வரை.” இவ்வாறு, பல்வேறு கோணங்களில் பல்வேறு தலைப்புகளில் மனிதர்களை பரபரப்பாகவும் அதே நேரத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.

இன்று அவசர உலகில் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ள கூட நேரமில்லாத அவசர சூழலில் மனிதர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து அவர்களை மேன்மையடைய செய்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் செயல்பாடுகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் நிகர் ஊடகங்கள் தான். இன்றைய காலத்தில் ஊடகங்களைப் பற்றி தெரியாதவர்கள் இல்லை எனலாம். அந்த அளவிற்கு உலகெங்கும் வலை பின்னி இருக்கும் இவற்றிற்கு தேசிய எல்லைகள் என்பதெல்லாம் கிடையாது. ஊடகம் இல்லையெனில் இவ்வுலகம் இல்லை. மனிதனின் எண்ணங்களை கூர்மையாக்கி, சிந்தனையை செம்மையாக்கும் கருவி தான் ஊடகங்கள்.

ஊடகங்களின் வகைகள்

பொதுவாக ஊடகங்கள் என்பது அச்சு ஊடகங்கள்(காலை, மாலை செய்தித்தாள்கள்/வார, மாத இதழ்கள்) வானொலி, காட்சி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவை. இவை செய்திகள் மற்றும் தகவல்களை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த ஊடகங்களுக்காக தனியாக செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் உள்ளனர். உலகின் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளை செய்திகளாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மை மாறாமல் தொகுத்து வெளியிடுவது இவர்கள் பணி. ஒரு ஊடகத்தின் நிருபர்கள் பாராளுமன்றம் மற்றும் தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றச் செய்தியளர்கள், அரசியல் கட்சிகள் அது தொடர்பான செய்தியாளர்கள், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அவலங்களை விளக்கும் காவல்துறை மற்றும் புலனாய்வுச் செய்தியாளர்கள், திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறை செய்தியாளர்கள், மற்றும் வெளிநாட்டுச் செய்திகளை தருவதற்கு என உள்ள செய்தியாளர்கள் மாவட்டச் செய்தியாளர்கள், சிறப்புச்
செய்தியாளர்கள் என ஊடகங்களுக்கு என்று பல செய்தியாளர்கள் உள்ளனர்.

இவர்களின் வேலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் செய்திகளை வெளியிடுதல், முக்கிய நிகழ்வுகள், விபத்துக்கள், மற்றும் பிரச்சனைகள், அரசாணைகள், அரசியல் கட்சிகளின் செய்தி வெளியீடுகள், மற்றும் அறிக்கைகள், முக்கியப் பிரமுகர்கள், செய்தியாளர் சந்திப்பு. பொதுக் கூட்டங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களான ஏ.என்.ஐ (ANI-Asian News International), யூ.என்.ஐ (UNI-United News of India),பி.டி.ஐ (PTI-Press Trust of India)  இவை செய்தி நிறுவனங்கள் ஆகும் இவற்றின் வேலை உலகெங்கிலும் நடக்கும் செய்திகளை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வழங்குவதே. இந்த நிறுவனங்கள் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளுக்கு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இதன் மூலம் செய்திகளாக மாற்றம் செய்யப்பட்டு பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஊடகங்களின் முக்கியத்துவம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் ஆகும். இவற்றின் சிறப்பு என்னவென்றால், அது கருத்து சுதந்திரத்தை அளிக்கிறது மற்றும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு இடம் கொடுக்கப்படுகிறது.ஊடகங்கள் பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படும் அதே வேளையில், ஊடகங்கள் உலகத்தின் உண்மையான மற்றும் கடுமையான யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றது. மேலும் மக்கள் எப்போதும் உண்மையான மற்றும் நேர்மையான செய்திகளை நம்புகிறார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊடகங்களில் வேலை செய்யும் செய்தியாளர்கள் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா(Press Council of India)என்ற அமைப்பு. இந்தியாவில் 1965 உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு பல உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, சிறிய மற்றும் பெரிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள், போன்றோர் இந்த அமைப்பில் இருப்பர். இந்த அமைப்பிற்கு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கைச் செய்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் நலன்கள் பாதுகாப்பதோடு மட்டுமல்ல, இவர்கள் இவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரைமுறைகளையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஊடகங்களின் தேவைகள்

இந்தியாவைப் பொருத்தமட்டில் ஊடகங்களில் பெருக்கம் மற்றும் சமூக ஊடகங்களின் எழுச்சியுடன் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆம், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அனைத்துவித செயல்பாடுகளும் முடங்கி கிடந்தாலும் ஊடகங்கள் மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்களுக்கு நாள்தோறும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த ஊடகங்கள் அந்த அளவிற்கு பேரிடர் காலத்தில் ஊடகத்துறை என்பது மிகச் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. 

 அக்காலத்திற்கும் தற்போது உள்ள காலத்திற்கும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால், ஊடகங்கள் என்பது செய்திகளை மட்டும் வழங்காமல் தினசரி பயனுள்ள தகவல்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பல்சுவை தகவல்களை தரும் சாதனங்களாக மாறிப் போய் உள்ளது.  ஊடகங்கள் ஊடுருவிப் பாயாத இல்லங்களே இல்லை, உலகினையே உள்ளங்கையில் அடைகின்ற காலம் இன்று வந்துவிட்டது. கடிகாரம் முள் ஓடுவதைக் காட்டிலும் வேகமாக நவீன மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஊடகங்களின் வளர்ச்சி

முன்னொரு காலத்தில் ஒரு செய்தி வெளியாகி அது மக்களைச் சென்று அடைய வேண்டுமானால், அதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால் அந்த நிலை தற்போது தலைகீழாய் மாறி, நொடிப் பொழுதில் நம் விரல் நுனிக்குள் கொண்டு வரும் அளவிற்கு மாற்றங்கள் வந்துவிட்டன. ஆம், அனைவரது கையிலும் இருக்கும் திறன் பேசிகள் என்று சொல்லக்கூடிய ஸ்மார்ட் போன்களின் வருகையால் இது சாத்தியமானது. ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் வலைதளங்களில் செய்தியாக பதிவிடும் பழக்கம் தற்சமயம் அதிகரித்துள்ளது. அதுதான் “மோஜோ” எனப்படும் மொபைல் ஜர்னலிசம்(Mobile journalism) எனப்படும் பத்திரிக்கைத் தொழில்நுட்பம்.

ஆம், இந்த மோஜோ அலை பத்தாண்டுகளுக்கு முன்னரே அறிமுகமானாலும், இப்போதுதான் அதன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது வருங்காலத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். இவ்வாறான சூழலில் மின்னணு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களின் வளர்ச்சி என்பது, மிக அபரிவிதமாக உள்ளது. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நொடிக்கு நொடி நமது வீட்டு வரவேற்பறையில் இருந்து பார்த்து ரசிக்கும் வசதிகள் தற்போது வந்து விட்டன. காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி என்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஊடகங்கள் செய்திகளை வழங்கும் பாரம்பரிய முறையில் இருந்து மாறி மின்னணு முறையில் வலைதளங்கள் மூலமாகச் செய்திகளை வழங்க ஆரம்பித்து விட்டன.

அதன்படி யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (X-தளம்) இதனால் செய்திகள் முன்பை விட விரைவாகவும், அதுவும் பார்வையாளர்களின் ஸ்மார்ட்போனில் நேரடியாக வீடியோக்களாக மற்றும் புகைப்படங்களாக மற்றும் செய்திகளாக பார்க்கும் வசதி தற்போது வந்து விட்டது. இச்சூழலில் அச்சு ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள் மற்றும் வார, மாத இதழ்கள் போன்றவற்றிற்கு வரவேற்பு குறைந்துள்ளதா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை, என்று தான் சொல்ல முடியும்.

அந்த அளவிற்கு அச்சு ஊடகங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன என்று சொன்னால் அது மிகை ஆகாது. அவ்வாறான சூழ்நிலையில் வரும் காலங்களில் டிஜிட்டல் ஊடகங்களின் தாக்கத்தால் அச்சு ஊடகங்களுக்கான மதிப்பு வருங்காலத்தில் குறையுமா? மதிப்பு குறைகிறது என்றால் இனிவரும் காலம் டிஜிட்டல் காலம் மட்டும் தானா? காட்சி ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் மோஜோ எனப்படும் புதிய தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றன? வலைதளங்கள் எவ்வாறு செய்திகளை மக்களுக்கு வழங்குகின்றது? இதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் என்ன? இதில் உள்ள புதிய வேலை வாய்ப்புகள் என்ன? என்பதை விரிவாகவும், தெளிவாகவும் த???????? ??????????.ொடர்ந்து பார்ப்போம். =