உறவு 65

பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே: 9486795506, 9443608003 04652-261588

சட்டை முகத்தினரின் பலவீனங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர் கூருணர்வு கொண்டவர் எனப் பார்த்தோம். இந்த கூருணர்வு தாக்கத்திலிருந்து விடுபட்ட இவர்கள் சில முயற்சிகளை, பயிற்சிகளைக் ைகக்கொள்ள வேண்டும் எனப் பார்த்தோம். ஐந்து வகை முயற்சிகள் பற்றிப் பார்த்தோம்.

  1. முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பவர்

நமது எதிர்காலமே நாம் எடுக்கும் முடிவுகள்/தீர்மானங்கள் அடிப்படையில்தான் இருக்கும். இந்த நிலையில் அசட்டை முகத்தவர் முடிவுகள் எடுப்பதில் ஒன்றில் தாமதிப்பார்கள். இல்லாவிட்டால், தீர்மானம் செய்வதையே தவிர்த்துவிடுவார்கள். இதனால் இவரோடு பயணிப்பவர்கள் பெரும் சலிப்புக்குள்ளாகிவிடுவர்.

நிகழ்ச்சி

குறிப்பிட்ட நபர் ஒரு நாட்டின் பிரதமராக இருந்த பொழுது தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தொழிலாளிகளின் சங்கத் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தார்கள். காரணம் அது மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமாக இருந்தது. மேலும் தொழிலாளர்களில் 90 விழுக்காட்டிற்குமேல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் அரசாங்கமோ இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இன்று பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடுவார்கள், நாளை, அடுத்த மாதம்… இப்படி சீக்கிரத்தில் கூப்பிட்டு வேலை நிறுத்தம் ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்டும் எனத் தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நாட்களை. வாரங்களை ஏன் மாதங்களை எண்ணிக்கொண்டிருந்ததுதான் மிச்சம். அரசாங்கம் அசைந்து கொடுப்பதாக இல்லை.

ஒரு வருடம் கடந்தது; மறு வருடம் கடந்தது; அரசாங்கம் வேலை நிறுத்தத்தைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால், இந்த  வேலை நிறுத்தத்தில் அரசின் நிலைப்பாட்டினால் இந்த தொழிலாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தார்கள். இதனால்தான் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது பற்றி முடிவு எடுப்பதைத் தவிர்த்தார்கள்.

இதனால் தொழிலாளர்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். சம்பளம் இல்லாததனால் குடும்பங்கள் பட்டினியால் வாடின. போதாத குறைக்கு இவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தும் அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்தது. இதனால் கணக்கற்ற குடும்பங்கள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அரசின் இந்தச் செயலை எதிர்க்கட்சிகள் குறை கூறின. ஆனால் நடுத்தெருவில் நின்ற தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஒரு நிர்வாகத்தில் இப்படி தீர்மானங்களைத் தள்ளிப்போடும், தவிர்க்கும் நபர்கள்  இருந்தால் இதனால் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும். இந்த விசயத்தில் அசட்டை முகத்தினருக்கு மனிதாபிமானம் தேவைப்படுகிறது.

  1. பிறருடைய தயவில் வாழ்வதாக எண்ணுபவர்

வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி பெற ஒரு தாரக மந்திரத்தைப் பற்றி தொலைக்காட்சியில் நம்பிக்கையை விதைக்கும் ஜாய்ஸ் மேயர் என்ற உளவியலாளர் கூறுகிறார். அதாவது அவர் கடவுளை கருணைக் கடலாகக் காண்பதால் இக்கட்டான சூழ்நிலையில் ‘‘கடவுளே உமது கண்களில் எனக்குத் தயவு (கருணை) கிடைக்கட்டும்’’ எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார். இது சூழ்நிலைகளை மாற்றிவிடும் என்கிறார். ஏனென்றால் கடவுளின் கருணையால்தான் நாம் வாழ்கிறோம். அதாவது அவரது தயவில் நாம் வாழ்கிறோம் என அவர் நம்புவதால் இவ்வாறு கூறுகிறார். இப்படி நாம் கூறுவதால் பிறருடைய கண்களில் நமக்கு தயவு கிடைக்கும் என அவர் நம்புகிறார். ஏனென்றால் மனிதன் இன்னொரு மனிதனின் தயவினால் வாழ்வதாக அசட்டை முகத்தினர் நம்புகின்றனர்.

ேஷக்ஸ்பியரது ‘வெனிஸ்வர்த்தகன்’ என்ற நாடகத்தின் இந்த தயவு/இரக்கம் பற்றி அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் ஆன்றனியோ என்பவர் ஷைலக் என்ற யூதனிடம் பெரிய ஒரு தொகையை கடனாகப் பெறுகின்றார். அதை குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியாத நிலையில் ஷைலக் ஒப்பந்தத்தின்படி ஆன்றனியிடம் ஒரு துண்டு சதையை வெட்டிக் கேட்கிறான். அப்போது போர்சியா என்ற பெண், வழக்கறிஞர் வேடம் பூண்டு, ஷைலக்கிடம் ஆன்றனியோவுக்குத் தயவு/இரக்கம் காட்டும்படி கூறுகிறார்(ள்). காரணம் அவரது வார்த்தையில் தயவு இருமுறை ஆசிகொடுப்பது – அது கொடுப்பவரையும் ஆசிர்வதிக்கிறது, பெறுபவரையும் ஆசிர்பெற வைக்கிறது என்கிறார். ஆனால் தனக்கு ஒரு பவுண்டு சதைதான் வேண்டுமென ஷைலக் விடாப்பிடியாய் கூறுகிறான். அவனிடம், ‘‘நீ ஆன்றனியோவின் உடலில் ஒரு பவுண்டு சதையை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு துளி இரத்தம் கூட சிந்தக்கூடாது; ஏனென்றால் அது ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை’’ என்பதைச் சுடடிக்காட்டிய போது ஷைலக் வழிக்கு வருகிறான்.

பிறர் தயவில்தான் நான் வாழ்கிறேன் என்ற அசட்டைமுகத்தினரின் நம்பிக்கை அவர்களது தன்னம்பிக்கையின்மையையே வெளிக்காட்டுகிறது. அடுத்தவர் நமக்கு தேவைதான். ஆனால் அடுத்தவர் தயவில் நாம் வாழ வேண்டிய அவசியமில்லை. அசட்டைமுகத்தினர் இந்தத் தெளிவை பெற்றுக் கொள்வது அவசியம். =