வெற்றி நமதே – 6

திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமோ!
இந்தப் பாட்டு வரிகள் மாதிரி

பிறந்ததுல இருந்தே போராட்டம் தான்டா
என் வாழ்க்கைனு நம்மள்ள

எத்தனையோ பேர் பல நேரங்கள்ல

சிந்திப்போம். ஆனால் நம்ம பிறப்பே ஒரு போராட்டம் தான்.

‘தக்கன பிழைத்திருக்கும்’ (survival of fittest) என்ற டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி கோடிக்கணக்கான அணுக்களோட போராடி வெற்றி பெறும் ஒரு அணு தான் உயிர்த்தோற்றத்தின் மூல காரணி மாதிரி, போராட்டம் நம்ம Bloodல உள்ளது. Why Blood same Blood மாதிரி…

சரி… பிறக்கிறதுக்கே இவ்வளவு போராடுணும்னா…அப்ப வாழ்றதுக்கு அதுவும் நல்லா வாழ்றதுக்கு… போராடித்தான் ஆகணும்.

நாமெல்லாம் போராட்டம் நடத்துறது நல்லா வாழ்றதுக்குதான். வாழ்க்கையில போராடுற சாதாரண ஆள்களுக்கு மத்தியில வாழ்க்கையோடவே போராடி வென்ற ஒரு வெற்றியாளனின் கதை தான் சொல்லப் போறேன்.

பிறக்கும் போதே பார்வைத் திறனில்லாமல் பிறக்கின்ற குழந்தைகளைப் பாத்திருப்போம். அவங்க வாழ்க்கை கஷ்டம் தான். அதுல எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், தன்னோட 17 வயசு வரை உலகத்தைப் பாத்து ரசிச்சு கனவுகளோடு வாழ்ந்த ஒருவனுடைய உலகம் கொஞ்சம் கொஞ்சமா இருட்டாகி, ஒரு நாள் மொத்தமும் இருட்டாகுற நிலைமை ரொம்பக் கொடுமை.

அப்படி கொடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு, போராடி இந்தியாவிலேயே கஷ்டமான போட்டித் தேர்வாகக் கருதப்படும் IAS தேர்வில் வெற்றி பெற்ற கிருஷ்ண கோபால் திவாரி என்ற சாதனையாளனின் கதை தான் இது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் நடுப்பிள்ளையா பிறந்த ஆள்தான் நம்ம கதை நாயகன்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது, நல்லா டிப்டாப்ஆ ஒருநாள் Schoolக்கு டிரஸ் போட்டு போக, அவனைப் பாத்து வாத்தியார் ‘‘இவரு பெரிய கலக்டருன்னு’’ கிண்டல் பண்ண அவனுக்கு தெரியாம ஆழ்மனதில IAS விதை விழுந்து போகுது. இந்த சூழ்நிலைல தான் பிரச்சினை Flight ஏறி வருது. ராத்திரியானா பார்வைக் குறைபாட்டை அனுபவிக்கத் தொடங்கினார் திவாரி. பகல்லையும் சரியா வெளிச்சம் இல்லேன்னா போர்டை Boardஐ பாத்து படிக்கிறது கஷ்டமாகுது. ராத்திரில நடக்கும் போது எங்கயாவது போய் மோதிட்டே இருந்தத பாத்து அவங்க அம்மா townல இருக்குற கண் டாக்டர்ட்ட கூட்டிட்டு போயி காண்பிக்க, அப்பதான் அது ரெட்டினைடிஸ் பிக்மென்டோசா என்ற கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும் மரபணு கோளாறு காரணமா வர்ற நோயின்னு கண்டுபிடிச்சாங்க.

மேலும், இந்த அறிகுறி மோசமாகி அவர் கண் பார்வைய முழுமையா இழந்திடுவாருன்னு டாக்டர் ஒரு குண்டையும் தூக்கிப் போட்டாரு. இதுல என்னா கொடுமைன்னா, அவனோட அப்பா வெளில தெரிஞ்சா அவமானமா பேசுவாங்கன்னு பயந்திட்டு, இந்த விஷயத்தை யாருட்டேயும் சொல்லாம மறைச்சிட்டாரு, நம்மாளுக்கு இந்த விஷயம் தெரியாததால அவரும் வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்தார். ஆமா,daily cycle  ஓட்டிட்டு 12வது வரை Schoolக்கு போனாப்ல…

சாயந்திரம் ஆனா கண் பார்வை மங்குறதால எல்லா வேலையையும் பகல்லயே முடிச்சிடுவாப்ல. சின்னதம்பி படத்துல கவுண்டமணி மாதிரி. இப்பதான் ஒரு சட்ட சிக்கல் வந்தது. 12வது முடிச்சதுக்கப்புறம் College admission 100 km தொலைவில் உள்ள
Purvanchal University, Jaunpur College-ல் கிடைச்சது. அங்க போயி College போயி படிச்சிட்டு இருந்த திவாரி ஒருநாள் கார்கில் போர் பற்றிய செய்தியை படிச்சிட்டு இருந்தப்ப தான் அவருக்கு விளங்குச்சு. அவருக்கு இடது கண்ணில் மட்டும்தான் பார்வை தெரியுதுன்னு. உடனே திவாரி பக்கத்துல இருந்த டாக்டர்ஐ போயிபாக்க அப்பா மறைச்சுவச்ச அந்த இடியை டாக்டர் தூக்கி இவர் தலைல போடுறார். அது மட்டுமில்ல, படிக்கிறத நிறுத்தணும் இல்லேன்னா இன்னொரு கண்லயும் விரைவில பார்வை பறிபோயிடும்னு இன்னொரு குண்டையும் போட்டாரு.

முதல் குண்டுக்கு பெருசா பயப்படாத திவாரி இரண்டாவது குண்டுக்கு ஆள் அவுட்… படிக்க முடியலேன்னா எப்படி IAS ஆவறது.வாழ்க்கையில பிரச்சினை வர்றது சகஜம் தான். ஆனால் வாழ்க்கையே பிரச்சினையானா என்னா பண்றது?

நம்ம கிட்டல்லாம் இத சொன்னா நமக்கு தாங்க முடியுமான்னு தெரியல. ஆனா, நம்ம திவாரி என்ன பண்ணாரு தெரியுமா?Right விடு… கண்பார்வை மொத்தம் போறதுக்குள்ள எப்படியாவது படிச்சு தன்னைக் காப்பாற்றிக் கொள்ற நிலைமைக்கு வளர்ந்திடனும்னு அடுத்த வேலையை பாக்க ஆரம்பிச்சிடுச்சு அந்த பயபுள்ள…

பெத்தாங்களா… செஞ்சாங்களா?ஆற்றின் போக்கை எவ்வளவு தடுத்தாலும் அது மாற்று வழி கண்டுபிடிச்சுபோகுற மாதிரி, வாழ்க்கைப் பாதை முற்றிலும் அடைந்த போதும் தடைபட்டு நிற்காமல் மாற்றுப்பாதை கண்டு பிடித்துமுன்னேறுகின்ற மனம் படைத்தவனை உலகத்தின் எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது. வெளிச்சம் போறதுக்குள்ள இலக்கை அடைஞ்சிடனும்னு இன்னும் தீவிரமா படிக்க ஆரம்பிச்சார் திவாரி. கிட்டத்தட்ட College 3rd yearல தேடிய எல்லாம் பெஞ்சோட பெஞ்சா குனிஞ்சா தான் படிக்கவும் முடியும், எழுதவும் முடியும்ன்ற அளவுக்கு பார்வை மங்கலாகிட்டே போகுது. மீண்டும் டாக்டர்ட்ட போனா operation பண்ணா பார்வை போறத கொஞ்ச நாள் தள்ளி போடலாம். ஆனால், அதுக்கு பணம் நிறைய செலவாகும் அப்படிங்க, திண்ணற சோத்துக்கே தாளம் போடுற நிலைமைல இது தேவையான்னு திரும்ப வந்துடுறாப்ல.

‘‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடியது இளமையில் வறுமை’’ன்னு ஔவையார் சொன்ன மாதிரி சொந்தக் கண் பறி போகுறத தள்ளிப்போட முடியாம வறுமை வாட்டிய அவருடைய வாழ்க்கை கொடுமை தாங்க… வறுமையின் நிறம் சிவப்பு…

சமூக அவமானத்துக்குப் பயந்து தன்னோட குறைைய வெளியிலேயே சொல்லாம இருட்டுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தார் அந்த ஞானப்பழம்…

அந்த சமயத்துல தான் All India Radioவில பார்வையற்றோர் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.அதுலபேசுன ஒரு டாக்டர், 40% பார்வைத்திறன் இல்லேன்னா கூட பார்வையற்றோர் Certificateக்கு Eligibleனு சொல்ல, அப்பதான் நம்மாளுக்கு புரிஞ்சது பார்வையற்றோர்னா மொத்தப் பார்வையும் போனவங்க இல்லேன்னு.சந்தோஷத்துல துள்ளிக்குதிச்சாப்ல திவாரி.ஏன்னா, பார்வையற்றோர் சான்றிதழ் கிடைச்சா IAS தேர்வுல Scribe (உதவிக்கு ஆள்) வச்சு எழுதலாம்.

உடனே ஓடுனான் மனுஷன் டாக்டர் Certificate வாங்க. அவங்க தூக்கிப் போட்டாங்க அடுத்த இடி. ஆமா… Certificate விற்பனைக்குன்னு Boardதான்போடல. Board போடாமலேயே Certificateஐ வித்துக்கிட்டிருந்த டாக்டர்க்கு பணம் கொடுக்க முடியாமல் திரும்ப வந்து சாப்டுற காசை மிச்சப்படுத்தி ஒரு வருஷம் கழிச்சு தான் Certificateஏ வாங்க முடிஞ்சது, இந்தப் பாவ மனுஷனுக்கு.

இந்த சூழ்நிலைல பார்வைத்திறன் படிச்சுபடிச்சு இன்னும் மோசமாக முழுசா போறதுக்குள்ள Braile Language (பார்வையற்றோர் தொட்டுணர்ந்து படிக்கும் மொழி)படிக்கிறதுக்காக, National Institute of Visually Handicapped (NIVH) Dehradunக்கு வண்டி ஏறுறாரு.

முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்ன்ற மாதிரி வாழ்க்கையோட திருப்புமுனை அங்கதான் அமைஞ்சது.Braile  மட்டுமல்ல Computersம் (பார்வை யற்றோருக்கானது) Screen readingம் கூடவே கத்துக் கொடுத்தாங்க.

இனிமே பார்வையே இல்லேன்னாலும் படிச்சிட முடியும்ன்ற நம்பிக்கை வந்துச்சு. அதே நம்பிக்கையோட டெல்லியில உக்காந்து IASக்கு தீவிரமா படிச்சாரு. சாதாரணமான பாக்குறவங்களுக்கே Daily 8-10 மணி நேரம் படிக்க வேண்டிய சூழ்நிலைல நம்மாளு 16-18 மணி  நேரம் போராடி படிச்சாரு.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றின்னு நம்ம முன்னாடி தொடர்ல பாத்த மாதிரி, இறைவன் அவரோட உலகத்தை இருட்டாக்குனாலும், உலகத்துக்கு தன்னால வெளிச்சத்த கொடுக்க முடியும்னு நம்புன அந்த நம்பிக்கை நாயகன் 2008ம் வருடம் இந்தியாவிலேயே 142வது ராங்குடன் IAS Exam Pass பண்றாரு. அது மட்டுமல்ல முழு பார்வைத் திறனற்ற இந்தியாவின் முதல் IAS அதிகாரி என்ற சாதனையும் அவரோடது தான்.

Super அப்பு… இனிமே வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்னு நினைச்சா…IAS பரிட்சை நடத்துற UPSC ஒரு letter அனுப்புறாங்க. நீங்க பார்வையற்றவரா இருக்கறதால 3 விஷயம் Prove பண்ணனும்னு,

  1. உங்களால பாத்து வேலை பாக்க முடியும்
  2. கம்ப்யூட்டர் உதவியோட எழுதப் படிக்க முடியும்
  3. யாரோட துணையில்லாம நடக்க முடியும்

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி… அவரே கண் பார்வையற்றோர் Categoryல apply பண்ணி பரீட்சை எழுதினார்.அவர்ட்ட நீ பாத்து வேலை பாக்க முடியும்னு doctor Certificate கேட்டா என்ன பண்றது.

நம்ம ஆளு அசந்து போயிஉக்காரல. எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துடலாம்னு இறங்குகிறாப்ல களத்துல. வாழ்க்கையோடவே அசால்ட்டா சண்டை போடுற ஆளுக்கு UPSC எம்மாத்திரம்… இந்திய அரசின் அனைத்து துறைக்கும் இதனை சுட்டிக்காட்டி கடிதப் போராட்டம் நடத்துறாரு. ஆடிப்போன அரசாங்கம், ஐயோIst point Clerical Mistake… I am sorryன்னு
appeat அடிக்க மத்த விஷயங்கள் (Dehradunல கத்துக்கிட்டதுதானே…)தன்னால முடியும்னு doctor Certificate கொடுக்க 2008 நவம்பர் மாசம் IAS training Join பண்ணி இன்னைக்கு மத்தியப் பிரதேச மாநிலத்துல சமூகநீதித்துறைல இயக்குநராக சேவை செய்து வருகிறார் நம்ம திவாரி.

 அதனால மக்களே,வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும்,அடியும்,இடியும் தந்து வாழ்க்கை நம்மளோட FootBall விளையாடினாலும் அதுக்கு பயந்து போய் Surrender ஆகாம மன உறுதியோட அதனை எதிர்த்துப் போராடினால் வெற்றி நிச்சயம். l