வெற்றி நமதே – 1
திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை
‘வெற்றி நமதே’ என்ற தொடரின் மூலம், கட்டுரைகள் வழியாக, உங்களிடம் பேசலாம் என்று நினைக்கின்றேன்.
எழுத்தில், பிறமொழிச் சொல் கலப்பு, எனக்கு விருப்பமில்லை என்றாலும், சொல்லுகின்ற செய்தி, உங்களுடைய சிந்தனைக்கு, எட்ட, எழுத்தில் பேசுகிறேன்.
வெற்றியாளனை மட்டுமே, உலகம் விரும்புவதால், வெற்றியையே மனிதன் விரும்புகிறான். அதனால், வெற்றியை அடைய, மனிதன் பலவற்றின் பின்னாலும், ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
“ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினான்” என்ற வசனம் போல.
வெற்றியென்றால் என்னங்க?
எப்படியாவது, பத்தாம் வகுப்பில் 450-க்கு மேல் மதிப்பெண் எடுக்க வேண்டும்.
கடவுளே எப்படியாவது, Arrear Exam Clear பண்ணிடனும்.
ஆண்டவா, இந்த Campus Placement-ல Select ஆகிடனும்.
இப்படித் தினம், தினம், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வாழ்க்கைப் போராட்டம் நடந்திட்டு இருக்கும். இந்த Temporary போராட்டத்தில் பெறுவதுதான், வெற்றியா அப்படின்னா, இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனால், தற்காலிக மகிழ்ச்சியல்ல வெற்றி. வெற்றிக்குள்ள படிக்கட்டுகள் மட்டும் தான், அது.
ஆனா, இன்னைக்கு Society-இல் நமக்குள்ள பிரச்சினை என்னவென்றால், மாணவனின், இளைஞனின் வெற்றி, தேர்வு அடிப்படையில், போட்டி அடிப்படையில்தான், நிர்ணயிக்கப்படுகிறது.
“Operation success but patient dead” என்பது போல, தேர்வில் வெற்றி பெற்றுவிட்டு, வாழ்க்கையில் தோற்பது அல்ல வெற்றி. வெற்றிங்கிறது, ‘வாழ்க்கையில் வெல்வது, வாழ்க்கையை வெல்வது’.
தனது பிள்ளை, படிப்பில் Excellent-ஆகி Class-இல், முதல் மதிப்பெண் தான் எடுக்கணும், விளையாட்டில் முதலிடத்தில் வரணும், Painting, Drama, இப்படி எல்லாவற்றிலும் முதலிடத்தில் வரணும், என்று ஆசைப்படும் பெற்றோர்களிடம், நம்ம ஊர்ல பேச்சுவழக்குல சொல்வாங்க, “அவன் மனசுனா இல்ல மாடா” இப்டி வதைக்கிறீங்களே! என்று.
சமூகத்தினுடைய எதிர்பார்ப்பு, மற்றவரை வீழ்த்தி, என் பிள்ளை, முதலிடத்ைத அடைய வேண்டும் என்று உள்ளது.
ஏன்னா, நமது சமூகம் மாணவர்களைப் போட்டியில் வெற்றி பெறுவதற்கே, தயார் படுத்துகிறது. அதனால், மாணவர்களுடைய மனதில் போட்டி எண்ணமே, உருவாகிறது.
அந்தப் பிள்ளையைப் பாரு, NEET தேர்வில் இவ்வளவு Rank எடுத்திருக்கா.
அந்தப் பையனைப்பாரு, Software Companyல Place ஆயிட்டான். இப்படி compare செய்து, மாணவர்களின் மனதில், போட்டி எண்ணத்தை உருவாக்கித் தேர்வில் வெற்றி பெறுபவனே, வெற்றியாளன் என்ற மாயத் தோற்றத்தை, இந்தச் சமூகம் உருவாக்கி வைத்துள்ளது.
பாவம், சமூகத்தின் இந்த ஆடுபுலி ஆட்டத்தில், தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவன், தன்னைத் தோற்றவனாகவே கருதி, வாழ்க்கையின் வெற்றியை இழக்கிறான்.
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,
தேர்வு அடிப்படையில் மட்டும், நாம் பெற்ற வெற்றியாளர்களைவிட, இழந்தவர்களே அதிகம், என்பது தான்.
எனது சிறுவயதில், என்னுடன் பள்ளியில் 9-ஆவது படித்த நண்பன், ஓட்டப்பந்தயத்தில், சிறுத்தை போல் சீறி ஓடுபவன். ஓடுவது போட்டிக்காக மட்டுமல்ல, அவனுடைய மகிழ்ச்சிக்காகவும் என்று, அடிக்கடி சொல்வான்.
அவனுக்கு படிப்பு வரவில்லை என்று, பெற்றோரும் ஆசிரியரும் அடிக்க, 9-ஆவதில் fail ஆனதோடு, படிப்பும் நின்றது; அவனுடைய ஓட்டமும் நின்று போனது.
Hussain Bolt போல வரவேண்டியவன், Mechanic Shop-இல் Bolt, nut சரிபார்க்கும், Mechanic-ஆக வாழ்க்கையைத் தொடர்ந்தான்.
பாவம் ஓடி, ஓடி வெற்றி பெற்றவன், சமூகம் வைத்த போட்டியில், தோற்றுவிட்டான்.
அப்ப எது தான் வெற்றி?
சுவாரஸ்யமான ஒரு உண்மைச் சம்பவம். Foot Ball-ஐ வெறித்தனமாக சுவாசிக்கும், அர்ஜென்டினா நாட்டின் ரோசாரியோ என்ற இடத்தில், ‘சீலியா ஒலிவேரியா கக்கிடினி’ என்ற வயதான பெண்மணி, தனது 4 வயது பேரனின், Foot Ball ஆர்வத்தைக் கண்டு,
‘‘அடேய், உலகத்திலேயே பெரிய Foot Ball Player ஆக நீ வருவாயடா’’ என கணித்துக் கூறுகிறாள்.
Foot Ball Size-ல அந்தச் சிறுவன், Clubல விளையாட்டைத் தொடர்கிறான். ஆனால், இதற்கிடையில் அந்தச் சிறுவனுக்கு, 11 வயதாகும் போது அந்த மூதாட்டி இறந்துவிடுகிறாள்.
தனது பாட்டி போன துக்கத்துல தவித்த சிறுவனுக்கு, அவளது கனவை நனவாக்க முடியாத, சிக்கல் ஏற்படுகிறது. அது என்னன்னா, Foot Ball-ஐ நேசித்ததாலோ என்னவோ, Foot Ball Size-லேயே, குட்டையாகவே இருக்கிறான். அந்தச் சிறுவனை டாக்டரிடம் காண்பிக்க, அவனுக்கு, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு (Growth Harmone Deficiency Disease) என்ற நோய் கண்டறியப்படுகிறது. மாதம் $1000 (டாலர்) மருத்துவச் செலவு தேவைப்பட்ட அந்நோய்க்கு, சாதாரண தொழிற்சாலைப் பணியாளரான தந்தையால், அவ்வளவு செலவு செய்ய வசதியில்லை.
Foot Ball-இல் கில்லாடியான அவனுக்கு, Spain நாட்டிலுள்ள Barcelona-வில் அவனுடைய உறவினர்வழி, ஒரு உதவி கிடைக்கிறது. Barcelona Football Club-ற்கு விளையாட வந்தால், அவனுடைய மருத்துவச் செலவையும், ஏற்பதாக அறிவிக்கிறது அந்த Club.
மகனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, சொந்த நாட்டை விட்டு, புலம்பெயர்கிறர்கள் அப்பாவும், அந்த 13 வயது சிறுவனும்.
அவனின் முயற்சியும், பயிற்சியும் வெற்றியளிக்கத் ெதாடங்கியது.
2004-இல் Under 20 Foot Ball Match-இல் Spain அணிக்காக விளையாட, அற்புத வாய்ப்பு கிடைக்கிறது.
Chance கிடைச்சா போதும்டா சாமி, என ஓடி Spain அணியில் சேராமல், என் சொந்த நாடான, அர்ெஜன்டினாவிற்கு மட்டுமே விளையாடுவேன் என, வந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு, நின்ற அவனை, அன்று அவனது Club நண்பர்கள் பார்த்து, ஏளனமாகச் சிரித்தார்கள்.
திறமையும், நம்பிக்கையும் உள்ள மனிதனின் வாசலை, வாய்ப்புகள் எப்போதும் தட்டிக்கொண்டு தான் இருக்கும்.
அடுத்த ஆண்டே, FIFA Youth Championship-இல் விளையாட, தனது சொந்த நாட்டிற்காக விளையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. அன்று முதல், உலகில் எல்லா Foot Ball போட்டிகளிலும் விளையாடி, வெற்றி வாகை சூடிய, அவனுடைய வாழ்க்கை இலட்சியம், தனது சொந்த நாட்டிற்காக, உலகக் கோப்பையை வெல்வது.
Foot Ball-இல் Goal அடித்துக் கொண்டே, தனது வாழ்க்கை Goal-ஐ அடைவதற்குப் போராடிய அவன், வேறு யாருமல்ல, தான் நெஞ்சில் சுமந்த கனவை, அண்மையில் நடந்த FIFA World Cup Foot ball-இல் நனவாக்கிய, உலகில் தலைசிறந்த கால்பந்து வீரனான, அர்ஜென்டினாவின் Lionel Messi தான் அது.
ஏறக்குறைய 30 ஆண்டுகள், நாடி, நரம்பு, புத்தி எல்லாம் தனது கனவைச் சுமந்து நடந்ததனால் தான், உலகக் கோப்பையை ெஜயித்த அடுத்த நாள், அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டே விமானத்தில் உறங்குவதைப் போல், ஒரு Photo Social Media-வில் செம Viral ஆனது.
‘நீ உலகின் தலைசிறந்த, Foot Ball Player ஆக வருவாய்’ என, 4 வயதில் அவனது பாட்டி விதைத்த கனவு முளைத்த போது, Messi-க்கு வயது 35.
நண்பர்களே, அப்போ நாமும் Messi-ஐப்போல, நெஞ்சில் சுமக்கும் கனவை, தடை பல வந்தாலும் தகர்த்தெறிந்து, முயற்சியும் பயிற்சியும் கொண்டு நனவாக்க உழைத்தால் ‘வெற்றி நமதே’.