விண்ணில் ஒரு நண்பன்-10
இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்
கைப்பேசியில் சில மெகாபைட்டு(MB) அளவுள்ள காணொளிகளைப் பார்ப்பதற்குச் சில நேரம் நமக்கு அதிகமான நேரம் தேவைப்படுவதும், சில நேரங்களில் உடனடியாகக் கிடைப்பதும் எந்த விதமான அதிர்வெண் பட்டையை உபயோகிக்கிறார்கள், நீங்கள் நிற்கும் இடத்தில் கோபுரத்திலிருந்து கிடைக்கும் ஆற்றல் எவ்வளவு, எத்தனை பேர் அங்கே பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இவைகள் மாறுபடுகின்றன.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடப்பதாகக் கருதுவோம். சேப்பாக்கம் ஸ்டேடியத்தை ஒட்டி எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அலைப்பேசிக் கோபுரத்தை ஒரு நிறுவனம் அமைத்திருக்கும். சாதாரணத் தினங்களில் போதுமான அளவு வேகத்துடன் நமக்குத் தரவுகள் கிடைத்துக் கொண்டிருக்கும். குறிப்பிட்ட நாளில் கிரிக்கெட் போட்டி நடக்கும் பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
அவர்கள் அனைவரும் கைப்பேசியை உபயோகிக்கத் தொடங்குவார்கள். அதனால் திடீரென்று அன்றைய நாள் மட்டும் அலைப்பேசிக் கோபுரம் அளவுக்கு அதிகமான சந்தாதாரர்களைத் திருப்தி படுத்த வேண்டிய வேலையைச் செய்ய வேண்டி இருக்கும். அதனால் அதிர்வெண் பட்டை அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் தரவுகள் செல்லக்கூடிய வேகம் குறையத் தொடங்கும்.
செயற்கைக்கோளுக்கு செய்தி அனுப்பும் முறைகள்
இப்பொழுது செயற்கைக்கோளுக்குச் செய்திகள் எப்படிச் செல்கின்றன என்பதைத் தொடர்வோம். இப்படியாகப் புவியில் இருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படும் செய்திகள் மின்சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு ஊர்தி அலைகளில் ஏற்றப்பட்டுச் செயற்கைக்கோளை நோக்கி தனது பயணத்தைத் தொடரும். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். நாம் அனுப்பும் செய்தி எப்படிச் செயற்கைக்கோளுக்குப் போய்ச் சேரும்.
அதே நேரத்தில் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, அவை அனைத்திற்கும் இது சரியாகப் போய்ச் சேருமா? என்ற சந்தேகம் இங்கு எழும். இதைத் தெரிந்து கொள்ள ஒரு வகுப்பில் பல மாணவர்கள் இருப்பார்கள். ஆசிரியர் ஒரே செய்தியை அனைவருக்கும் கூறவேண்டும் என்றால் அனைவரும் இதை எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த மாணவனின் பெயரை உச்சரித்து நீ இதைச் செய், இந்தப் பக்கத்தைப் படி என்று கூறுவார். ஒரே பெயரில் இரண்டு மாணவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களை வேறுபடுத்த அவர்களுடைய பெயரின் முதல் எழுத்து அல்லது வேறு ஏதாவது அடை மொழியை வைத்து அழைப்பார்.
செயற்கைக்கோளுக்கு நாம் செய்திகள் அனுப்பும்போது அதிர்வெண்பட்டை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் செய்திகள் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மட்டுமே அனுப்ப முடியும். எந்த அதிர்வெண்ணில் செயற்கைக்கோள் அனுப்பப்பட வேண்டும் என்பதை முன் கூட்டியே சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (The International Telecommunication Union:ITU) ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுத்திருக்கும். அதன் படியே நாம் செயற்கைக்கோளில் கருவிகளை அமைக்க வேண்டும். அதனால் இந்தப் பிரச்சனை எழுவது இல்லை.
புவியிலிருந்து செய்திகளை அனுப்பும் பொழுது மிகப்பெரிய ஆண்டெனாக்களை உருவாக்கி நம்மால் அனுப்ப இயலும். ஏனென்றால் புவியில் அவற்றைச் செய்வது எளிது. ஆனால் பெரிய அலை திரட்டிகளை உருவாக்கி அவற்றைச் செயற்கைக்கோளில் பொருத்துவதில் பொருளாதாரச் சிக்கலும், தொழில்நுட்பச் சிக்கலும் இருக்கின்றன. செயற்கைக்கோளின் எடை அதிகமாகும் பொழுது, அதை சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய செலவு அதிகமாகின்றது.
ஏன் செயற்கைக்கோளில் பொருத்தப்படும் அலை திரட்டிகள் பெரியதாக இருக்கின்றன.
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.