உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் – 10
முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
பாகம் 1
CIPET – Central Institute of
Petrochemical Engineering and Technology
இந்தியாவின் மிகப் பழமையான, பெருமை மிகுந்த கல்வி நிறுவனமான சிப்பெட் 1968 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகும். பிளாஸ்டிக்ஸ்,பெட்ரோல் மற்றும் ரசாயனங்களைப் பிரித்தல், அவற்றைக் கையாளுதல், பெட்ரோலியம் சார்ந்த ஆலைகள் குறித்த தரமான பயிற்சி மற்றும் கல்விக்கு சிப்பெட் உலகப் புகழ்பெற்றது. சிப்பெட் ஆளுகையின்கீழ் நாடு முழுவதும் 45 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்றாண்டுகள் பட்டயப் படிப்புகள், முதுகலை பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் இந்நிறுவனத்தால் கற்பிக்கப்படுகின்றன.
Diploma courses / Advanced Diploma Courses
1. Plastic engineering
2. Tool design
3. Polimer chemistry
4. CAD/CAM
5. Mould design
6. Quality control
Post Graduate
Diploma Courses
1. Polimer Science and Technology
2. Polimer Engineering
3. Plastic processing Technology
பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் தங்களின் தொழில் திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளைப் பெறும்வகையில் நடத்தப்படும் சான்றிதழ் படிப்புகள் சிப்பெட் நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சி, தொழில்துறையின் தேவைக்கேற்ப சான்றிதழ் படிப்புகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகின்றன. இரண்டு நாள், பத்து மணி நேரம், 20 மணி நேரம், 80 மணி நேரம் தொடங்கி 30 நாள், 60 நாள் என திட்டமிடப்பட்டு முழுவதுமாக களப்பயிற்சி தரப்படுவதால் இந்நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புகள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன.
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.