ஆளப்பிறந்தோம் – 31

திரு.இள.தினேஷ்பகத்
உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று, நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள் அல்ல. மாற்றங்கள் நோக்கிய பயணம் ஆதிகாலம் முதல் எல்லாக் காலங்களிலும் நடைபெற்று வந்திருக்கிறது.
நம் ஒவ்வொருவரின் கனவும் செயல்வடிவம் பெறுவதற்குத் தொடர்ந்து போராடினால்தான் வெற்றி கிட்டும்.
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.
இந்த இதழில் SSC பணியாளர் தேர்வாணையம் நடத்தும் JE (ஜூனியர் இன்ஜினியர்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JE-2025 தேர்வு பற்றிய முழுமையான விவரத்தினைப் பார்க்கலாம். கடந்த 2 – மாதங்களுக்கு முன் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து பின் கைவிடப்பட்டது. தன் தாய்நாட்டிற்காக எண்ணற்ற வீரர்கள் ஒவ்வொரு முறையும் போர்க் காலங்களில் தன் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர்.
1999 – இல் நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த ஒருவரைத்தான் இந்த இதழில் பார்க்க இருக்கிறோம்.
இராணுவ அதிகாரி லெட்டினன்ட் கர்னல் ஆதி மாரியப்பன் – திருமதி. அமிர்தவல்லி தம்பதியருக்கு 1972, ஆகஸ்ட் 10 மேஜர் மாரியப்பன் சரவணன் பிறக்கிறார். மேலும் அத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகளும் பிறக்கின்றனர்.
தனது தந்தையைப் போலவே தானும் இராணுவத்தில் சேரவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இவருக்கு ஆவலாக இருந்தது. தனது தொடக்கக் கல்வியை பீகாரில் உள்ள கேந்திரிய வித்யாவில் படித்தார். பிறகு அவரது தந்தை எங்கெல்லாம் பணிபுரிந்தாரோ, அந்தந்தப் பள்ளிகளிெலல்லாம் படித்தார். 1989 – ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஒரு சாலை விபத்தில் அவரது தந்தை இறந்தார். அப்போது இவருக்கு வயது 16 தான். குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கல்லூரிப் படிப்பினை திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரியில் தொடங்கினார். கல்லூரியில் சிறப்பாகச் செயல்பட்டு 1992 – இல் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் மன்ற சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு OTA என அழைக்கப்படும் Officers Training Academy-இல் 1995 – இல் பட்டம் பெற்ற பிறகு தமுல்பூர், உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் பூட்டானில் பணிபுரிந்தார். 1996 – இல் கேப்டன் பதவி உயர்வும், 1999 – இல் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார்.
மே 1999 – இல் கர்னல் ஒ.பி. யாதவின் தலைமையில் மேஜர் M. சரவணனின் பீகார் பிரிவு 1 லடாக்கின் படாலக் துணைப் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டது. மே 26 அன்று ஆப்ரேசன் விஜய் தொடங்கப்பட்டதால், சுமார் 16,400 அடி உயரத்தில் உள்ள ஜீபார் மலைக்கு அருகில் உள்ள எதிரிகளின் முகாமினை தாக்குதல் செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கடுமையான எதிர்ப்பையும் மீறி, ஜீபார் மலைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய இடம் மட்டுமே விடியற்காலைக்குள் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு மே 28இல் 14,000 அடி உயரத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட எதிரி முகாமான ஜீபார் ரிட்ஜில் உள்ள பாயிண்டைக் கைப்பற்றும் பணியை மேற்கொண்டார். ஆனால் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு கூர்மையான பாறைகளையும் கொண்டிருந்தது. தாக்குதல் கைவிடப்பட்டது.
இரண்டு தாக்குதல்களின் தோல்விக்குப் பிறகு முன்னணி தாக்குதல் மட்டுமே ஒரே வழி என்பதை மேஜர் சரவணன் உணர்ந்தார். எதிரிகள் மலையின் உயரங்களில் வலுவாக இருந்தனர். இருப்பினும் மே 29 அன்று அதிகாலை 4 மணிக்கு ‘‘செய் அல்லது செத்துமடி’’ என்ற இறுதி கட்டளையுடன் தாக்குதல் தொடங்கப்பட்டது. மேஜர் சரவணன் ஒரு ராக்கெட் லாஞ்சரைச் சுட்டிக் கொண்டே எதிரி வீரர்களை கொன்றார். இவருக்கு வயிற்றில் காயமடைந்து அதிகளவு இரத்தம் வெளியேறிய போதும் தாக்குதலை நிறுத்தவில்லை. நம் பக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், கட்டளை அதிகாரி அவரை திரும்பச் சொன்னார். ஆனால் மேஜர் சரவணன் இலக்கை நெருங்கிவிட்டதாகவும், தனது வீரர்களைக் கொன்ற எதிரியை விடமாட்டேன் என்றும் பதில் அளித்துவிட்டு குண்டு மழை பொழிந்துகொண்டே மலை உச்சியினை அடைந்த முதல் நபர் இவர்தான்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.