சாதனையாளர் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

ல்வி கற்பது அவசியம் “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று ஒவ்வை மூதாட்டி கூறியுள்ளார்; யாரிடமாவது யாசித்தும் கல்வி கற்றுச் சொந்தக் காலில் நில்..! எனச் சொல்லாடுகிறாள்..!

மதுரை மாவட்டம் திருவாதவூர் மற்றும் இதன் சுற்றுப்புறப் பகுதிகளை சார்ந்த அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவ்வூரின் பேஸ்கார் மா. குருசாமி அவர்களது நினைவாக “..அறிவகம் கல்வி மையம்..” செயல்படுகிறது.

முதலில் கல்வியாலும் தனது பேராற்றலாலும் உயர்ந்த பதவியில் வீற்றிருக்கும் M.G.ராஜமாணிக்கம் I.A.S.,அவர்களை பற்றி வாசகர்கள் கவனத்திற்கு…,

2018 – ஆம் ஆண்டில் கேரளா மாநிலத்தில் எதிர்பாராத மழை வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட காலத்தில் அந்தப் பாதிப்புகளைச் சரிசெய்ய உடனடியாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் அங்கு அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றிய MGR எனும் அடைமொழியால் அழைக்கப்படுகிற M.G. ராஜமாணிக்கம் I.A.S.,ஆவார்..!

கேரளாவில் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைச் செயலாளர், வீட்டுவசதித்துறைச் செயலாளர், வருவாய்த் துறை கோயில் நிர்வாகம், உணவு குடிமைப் பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் குருவாயூர் மற்றும் கூடல் மாணிக்கம் கோயில் நிர்வாகம் ஆணையர் மற்றும் கேரளா மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்..! 

இவர் மலையாள மொழியில் எழுதிய “..அன்புடன் ராஜமாணிக்கம்..” எனும் புத்தகம் சாரம்சங்களில் இப்படி சொல்லியிருக்கிறார்…

“…இந்தப் புத்தகம் எனது சுயசரிதையோ, சர்வீஸ் ஸ்டோரியோ இல்லை; இப்புத்தகம் சிவில் சர்வீஸ் தேர்வை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியிருக்கிறேன்.

அத்தகைய இலட்சியப் பாதையில் செல்பவர்கள் பாதி வழியில் சோர்ந்து நிற்கின்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது..” என்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய சொந்த ஊரில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு “..இலவசப் பயிற்சி அளிக்கும் வகையில் தனது தந்தை நினைவாக  திருமிகு M.G.ராஜமாணிக்கம் I.A.S., அவர்களும், அவரது மனைவியும் ஒருமித்த கருத்துடன் அறிவகம் கல்வி மையத்தை ஆரம்பித்து கல்வியால் அறம் செய விரும்பியிருக்கிறார்கள்..!

திருமிகு M.G.ராஜமாணிக்கம் I.A.S., அவர்களது துணைவியார் திருமதி R.நிஷாந்தினி, I.P.S.,
கேரளாவில் உளவுத்துறை, காவல் துறை துணைத் தலைவரராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!

அறிவகம் கல்வி மையத்திற்கு கல்வி, கலை மற்றும் பல்வேறு பயிற்சி அளிக்கின்ற செழிப்பான ஆசிரியர்கள் ச.செல்வராஜ், மு.தென்னவன், சு.பாலசுப்ரமணியன், பேராசிரியர் முனைவர் போ.சத்தியமூர்த்தி, மா.திருநாவுக்கரசு, ம.தர்மலிங்கம் மாணவர்களின் திறமைகளுக்கு தங்கள் அனுபவங்களை உரமாக்கி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது..!   

ச.செல்வராஜ், தலைமை ஒருங்கினைப்பாளார், அறிவகம் கல்வி மையம், மதுரை..,

“..திருவாதவூர் பேஸ்கார் மா.குருசாமி என்றால் எல்லோர்க்கும் தெரியும். அவரது நினைவாக, ஏழை எளிய மாணவர்களும் அரசு வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காக “..அறிவகம் கல்வி மையம்..” தொடங்கப்பட்டிருக்கிறது.

பேஸ்கார் மா.குருசாமியின் மகன் திருமிகு எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., அவரது துணைவியார் திருமதி.ஆர்.நிஷாந்தினி ஐ.பி.எஸ்., அவர்களோடு, கடந்த 2017-ல் அப்போதைய மதுரை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு வீரராகராவ் ஐ.ஏ.எஸ்.,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இம்மையத்தைத் திறந்து வைத்திருக்கிறார்.

அதன்படி அறிவகம் கல்வி மையம் தொடங்கப்பட்டும், பயிற்சி அளிக்கப்பட்ட ஆறு மாதங்களிலே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் எங்களுடைய நான்கு மாணவர்கள் பங்கேற்றுத் தேர்ச்சி பெற்றனர். 

அதனைத் தொடர்ந்து 2022 – ஆம்ஆண்டு உயர் நீதிமன்றம் தேர்வு முகமை மூலம் நடைபெற்ற தேர்வில் ஒரு மாணவரும், 2023-ஆம்ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் மூன்று மாணவர்களும், இதே ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் இரண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

2024 – ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையில் நடத்திய குரூப் 4 தேர்வில் இரண்டு நபர்கள் தேர்ச்சி பெற்று பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்தும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தையும் சேர்ந்தவர்கள்.,

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சிலம்பம், வளரி, நாட்டுப்புற நடனம், பாடல் மற்றும் பரதநாட்டியம், கட்டைக்கால், ஓயிலாட்டம், தையல் பயிற்சி, தட்டச்சு, ஓவியம், எழுத்து, பேச்சு, மற்றும் விழிப்புணர்வுப் பயிற்சி உள்பட கோடைகாலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அதற்குரிய அனுபவம் பெற்ற ஆசான்களால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.