ஆளப் பிறந்தோம் – 30


திரு.இள.தினேஷ் பகத்

‘‘நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை
நறும்பூவின் மனம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை
பண்ணரம்பு இசை முழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க் குழைக்கக் காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும், வேண்டும்’’.
– வ.சுப. மாணிக்கனார்

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு, வணக்கம்.

கடந்த மே மாதம் மட்டும் தமிழக அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 8144 பேருக்கும் மேல். இதேபோல் வயது முதிர்வின் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் நிறையப் பேர் ஓய்வுபெற உள்ளனர் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்; நிச்சயம் வெற்றி உங்களுக்குக் கிட்டும்.

‘‘ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்’’

இக்குறளுக்கான விளக்கம் : ஒருவர் தனக்கு இயலும் செயலையும் அதைப் பற்றிய அறிவையும் பெற்றுத் தன்னம்பிக்கையோடு செயல்படும்போது அவரால் முடியாதது என்று எதுவும் இருக்க முடியாது.
நம் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றி காணலாம்.

நம்பிக்கையோடு முதலடியை எடுத்து வையுங்கள். அடுத்த அடியில்தான் வெற்றி இருக்கிறது.

இன்றைய தொடரில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வாய்ப்புகள் பற்றிப் பார்க்கலாம். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE).
இக்கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த பள்ளிகள் (ம) கட்டுப்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையத்தால் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்புடன் / இளநிலை / முதுநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஏதாவது துறையில் இளங்கலைப் பட்டம் ெபற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் (ம) இணையதளங்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்யும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளில் கண்காணிப்பாளர் பணிக்கு எழுத்து தேர்வு (கொள்குறி வகை/விரிந்துரைக்கும் வகையிலும்) இளநிலை உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு கொள்குறி வகையிலும் நடைபெறும்.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.