சாதனையாளர் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்
“கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் பார்ப்பதெல்லாம் பாடமாக்கிக் கொள்ள லாம்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் பார்க்கும் போதெல்லாம் பாடமாகத் தெரிவாய்..” என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்..!
பிரபஞ்சத்தின் பிரதான ஒளியின் வடிவமும், நடராஜர் சிலையின் நடன வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கிறதாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள “.. உலக வானியல் ஆராய்ச்சி மையம்..” சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது..!
அப்பேர்ப்பட்ட நடனக் கலைகளில் ஒன்றான “..பரதநாட்டியம்..” தென்னிந்தியாவில் தெய்வீகக் கலையாகப் போற்றப்படுகிறது, இக்கலையில் நிகிதா ஹரிணி எனும் மாணவி இளம் வயதினிலே குருஸ்தானத்திற்கு உயர்ந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..!
காரைக்குடியில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் எஸ்.நிகிதா ஹரிணி பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்பிற்குச் செல்கிறார். தமிழகத்தின் நாட்டிய ஆசிரியர் நாட்டிய கலாகேசரி மற்றும் பத்ம வழுவூர் பி.இராமையாபிள்ளையின் கலைப்பயண வாரிசு வகையறாவில் வந்த வழித்தோன்றல் என்றும் சொல்லப்படுகிறது.
இவரது வீட்டில் நிகிதா ஹரிணி பரதம் கற்றுக் கொடுப்பதை அவ்வழியாகச் செல்லும் மக்கள் பார்த்து விட்டு “..என் பொண்ணுக்கும், எங்க பேத்திக்கும் சொல்லிக் கொடுக்கணும்மா என்று கோரிக்கை விடுப்பது தினமும் சர்வ சாதாரணமாகி.. விட்டது..!
ஒருவரோ? இருவரோ அல்ல எல்.கே.ஜி முதல் கல்லூரி வரையிலான 143 – பேர் இவரிடம் பரதம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யத்துடன், வியப்பையும் ஏற்படுத்துகிறது..!
ஒரு புறம் புத்தகப்பை மறுபுறம் சலங்கையைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவருக்கு “..நாட்டியக் கலைமகள், நாட்டிய சிற்பம், ஒளிரும் சூரியன், வீரநாட்டிய வித்தகி, நவரச நாயகி, நாட்டிய கலா விஷாதாரா, இன்ஸ்பயரிங் யங்வுமன் போன்ற விருதுகளின் பட்டியல்..” நீள்கிறது.
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், ஆசியா புக் ஆப் வோல்ட் ரெக்கார்ட், கலாம் புக் ஆப் ரெக்கார்ட், விரிக்ஷா புக் ஆப் ரெக்கார்ட், ஐன்ஸ்டீன் வோல்ட் ரெக்கார்ட் பெற்ற பலசாதனைகளும் தொடர்கிறது.
இனி நம்மோடு எஸ்.நிகிதா ஹரிணி..,
“..எங்களது சொந்த ஊர் சாக்கோட்டை என்றாலும் வசிப்பது புதுவயல் தான். அப்பா, அம்மா வழிப் பாட்டி பரதக் கலைஞர், தாத்தா தவில் வித்துவான் பாரம்பரியக் கலைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
என்னோட இரண்டு வயதில் தாத்தா சோமசுந்தரம் பிள்ளை எனக்கு பரதக் கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததாக அம்மா சொல்லி இருக்கிறார்கள்.
நான் “..ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது அரங்கேற்றமும், ஏழாம் வகுப்புப் படிக்கும் போது சலங்கை பூஜையும்..” நடந்திருக்கிறது.
எனது குருநாதர் மூலமாக நான் தஞ்சாவூர் பாணியில் பரதக்கலை பயின்றேன், சிறுவயதிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் பற்பல கோயில் நிகழ்ச்சி களில் கலந்து கொண்டிருக்கிறேன்.
எங்க ஊரில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஆவுடையார் கோயில் உள்பட பலகோயில்கள், புதுவயல் ரோட்டரி கிளப், பல சங்கங்கள், பல்வேறு பொது அமைப்புகளிலும் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளேன்.
இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சியில் பரதத்தில் குருவாக உள்ளவர்கள் மட்டும் கலந்து கொண்டதில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்.
எந்தவொரு கலையிலும் கடின உழைப்பு, விடாமுயற்சி இருக்க வேண்டும் என குருநாதர் சொல்லியிருக்கிறார், மேலும் பரத வகுப்பிற்கு சரியான நேரத்தில் வரவேண்டும் என்று சொல்லுவாங்க அதைத்தான் நானும் எனது மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் மாணவியாகக் கற்றுக் கொள்ளும் போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன், இப்பொழுது நானும் குருவாகி எனது மாணவிகளுக்குக் குருவின் போத னைகளையும், அனுகுமுறைகளையும் கற்றுத் தருகிறேன்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.