ஆளப் பிறந்தோம் – 26


திரு.இள.தினேஷ் பகத்
IES 

“உங்கள் நம்பிக்கையே உங்கள் எண்ணமாகிறது.
உங்கள் எண்ணமே உங்கள் வார்த்தையாகிறது.
உங்கள் வார்த்தையே உங்கள் செயலாகிறது.
உங்கள் செயலே உங்கள் பழக்கமாகிறது.
உங்கள் பழக்கமே உங்கள் மதிப்பீடாகிறது.”   

                                                       – மகாத்மா காந்தி

ன் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். 1917 – இரஷ்யப் புரட்சியின் பின்னர் லெனின் செஞ்சதுக்கத்திலே உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

“உலக அளவில் நாம் அமெரிக்காவைவிட வல்லரசு நாடாக வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் நம் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்” என்று நாட்டு மக்களிடையே பேசுகிறார் லெனின்.

அந்தக் கூட்டத்தில் இருந்த மாணவன் ஒருவன் எழுந்து, அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
“படியுங்கள் அது ஒன்றே போதும்” என்கிறார் லெனின்

மாணவனுக்குப் ‘‘படியுங்கள்’’ என்கிறாரே, நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அறிய விரும்பிய பெண் ‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்கிறார்.

புன்முறுவலோடு அந்த பெண்ணைப் பார்த்த லெனின், ‘‘படியுங்கள்’’ என்கிறார் அமைதியாக.
அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் எழுந்து “பெரியவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அவருக்கும் ‘‘படியுங்கள்’’ என்ற பதிலைத்தான் கூறினார், லெனின்.

ஒரு நாடு வல்லரசாக மாற வேண்டுமானால் ஒட்டுமொத்த சமுதாயமும் படிப்பறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆதலால் முதலாவது நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்குமென்றால் அது கற்றல் மட்டுமாகவே இருக்கும் என்பது லெனினின் எண்ணம். அதைத்தான் லெனின் தன்னிடம் கேட்ட எல்லாருக்குமான பதிலாகக் கூறினார்.

போட்டித் தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படியுங்கள்; அதுதான் நமது வறுமையை விரட்டி வளமாக்கும். நமக்கான ஒரு அங்கிகாரத்தையும், அடையாளத்தையும் உருவாக்கும். எனவே இந்த ஆண்டில் நீங்கள் அரசுப் பணிப் பெற வாழ்த்துகிறேன்.

இந்த தொடரில் IES இந்தியப் பொறியியல் தேர்வு பற்றிப் பார்க்கலாம்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை, மின்உற்பத்தித் துறை, இரயில்வே துறை, தொலைத் தொடர்பு துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பொறியியல் சார்ந்த அதி உயர் பதவிகளில் சேர UPSC ஆண்டுதோறும் IES (Indian Engineering Service) என்ற தேர்வை நடத்துகின்றது. இது மத்திய அரசுப் பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்திலான தேர்வு ஆகும்.

(i) கல்வித் தகுதி

1. Civil Engineering
2. Mechanical Engineering
3. Electrical Engineering
4. Electronics & Telecommunication Engineering

மேற்கண்ட 4 – பிரிவுகளில் இத்தேர்வு நடைபெறுகிறது. பொறியியலில் வேறு பிரிவு (Other Branch) படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பிரிவிற்கு நெருக்கமான ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

(ii) வயது வரம்பு

பொதுவாக 21 – வயதிலிருந்து 30 – வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வினை எழுதலாம் (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகைகளும் வழங்கப்படுகிறது).

(iii) தேர்வு முறை

IES பணிக்கான தேர்வு 3 – கட்டங்களாக நடைபெறுகிறது.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.