ஆளப் பிறந்தோம் – 23


திரு.இள.தினேஷ் பகத்

“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால்
அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்”.   
                                                                   – ரத்தன் டாடா
ன் இனிய சகோதர,  சகோதரிகளுக்கு வணக்கம்.
 
வாழ்க்கையில் எந்தத் துறையிலும் முட்டி மோதிச் சென்றாலும் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றிகள் சாத்தியமாகின்றது. மேலும் மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பவர்கள் தான் சாதனையாளர்கள் ஆவார்கள். அவர்கள் தான் சரித்திரத்திலும் இடம்பிடிக்கின்றனர். இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபாரக் குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலகச் சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் டாடா அவர்களைப் பற்றி இந்த இதழில் பார்க்க இருக்கிறோம்.
 
அதற்கு முன்னர் (NABARD) விவசாயம் (ம) ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் உதவி மேலாளர் பணிக்கான தேர்வு பற்றிப் பார்க்கலாம்.
 
1. கல்வித் தகுதி
 
* நபார்ட்டில் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை, இளம் அறிவியல், பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
2. வயது வரம்பு
 
* பொதுப் பிரிவினர் (GT) 21 – வயதிலிருந்து 30 – வயது வரையும், பிற்படுத்தப்பட்ட (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (BC) 33 – வயது வரையும், தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் 35 – வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.
 
3. தேர்வு முறை
 
NABARD –இல் Assistant Manager பணிக்கான தேர்வு 3 – கட்டங்களாக நடைபெறும்.
 
i) Preliminary Exam
 
இத்தேர்வு Objective Type-இல் கொள்குறி வகையில் நடைபெறும்.
 
ii) Main Examination (கொள்குறி (ம) விரிந்துரைக்கும் வகை)
 
S.No. Paper Subject Type of Paper 
No.of QuestionsMarksDuration
1. Paper-I General English Online Descriptive 3 100 90 Minutes
2. Paper-II Economic & Social Issues  & Agriculture and Rural Dveopment 1) Objective
2) Descriptive 30
6 50
50 30 Minutes
90 Minutes
Total200
 
iii) நேர்முகத் தேர்வு (Interview)
 
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவசாயம் (ம) ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) உதவி மேலாளராக பணிநியமனம் செய்யப்படுகிறார். இந்தத் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் (Syllabus) தேர்வு அறிவிக்கைகள் போன்ற விவரங்களுக்கு https://www.nabard.org என்ற இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும். மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.