வெற்றியோடு விளையாடு! – 22


டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ன்றைய காலகட்டத்தில் பல்கலைக் கழகங்களில் முறைப்படியாக ஆய்வுப் பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவது என்பது எளிமையான காரியம் இல்லை. முனைவர் பட்ட ஆய்வு வகுப்பில் சேர்வதற்கே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தரமான ஆய்வு மாணவர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் பிஎச்டி., பெறும் நடைமுறைகள் கடினமாக்கப்பட்டிருப்பதன் காரணம்.‌ களப்பணி, ஆய்வுப் பணி தொகுத்தல், பணி மேலாய்வுப் பணி என்று முனைவர் பட்டம் பெறுவது என்பது கடலில் நீந்தி நீச்சல் அடிப்பது போல. அப்படி கடலில் மூழ்கி முத்து எடுத்து வந்திருக்கிறார் பேராசிரியர் சைதானி பேகம். இவர் எடுத்த முத்து சாதாரணமானது அல்ல. தங்கக் கடலில் மூழ்கி எடுத்த வைர முத்து. ஆம்! ‘‘தங்கத்தின் சில்லறை வர்த்தகத்தில் வியாபார யுத்திகள்’’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து வெற்றி கண்டிருக்கிறார்.

கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் சைதானி பேகம். கணவர் கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி.

நான் பிறந்தது மிகப் பாரம்பரியமான குடும்பம்.‌ எங்கள் சமூகத்தில் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதே சவாலாக இருந்தது ஒரு காலகட்டம். தற்போது அந்தச் சூழல் நிறைய மாறி வருகிறது.இருந்த போதும் என் முன்னால் பல தடைகள் இருந்தன. அவற்றைக் கடந்து பள்ளிப் படிப்பையும், முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தேன். அதுவே அப்போது பெரிய வெற்றியாக இருந்தது. தொடர்ந்து திருமணம், குழந்தைகள் என்று வழக்கமான வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து விட்டேன்.

இதன் பிறகு என்னுடைய கணவர்தான் என்னுடைய அத்தனை வெற்றிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்.‌ தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆர்வத்தை கணவரிடம் சொன்ன போது அத்தனை வகையிலும் ஆதரவு அளித்தார். தொடர்ந்து பி.எட்., பட்டம் பெற ஊக்குவித்தார். பி.எட்., முடித்து விட்டு பிஎச்டி படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை சொன்னேன்.‌ உடனடியாக அதற்கான முயற்சிகள் எடுத்து முழு ஆதரவு தந்தார்.‌

எனக்கு நல்ல ஆய்வு வழிகாட்டி அமைய வேண்டும் என்பதற்காக பல கல்லூரியில் நேரே இறங்கி பேராசிரியர்களிடம் பேசினார். வழிகாட்டி ஆசிரியர் அமைந்த போது, அடுத்து என்ன தலைப்பு எடுப்பது என்பது எனக்கு ஒரு குழப்பமாக இருந்தது.‌ பொதுவாக பாடம் சார்ந்த, பொது வணிகம் சார்ந்த, துறைக்ககுள்ளேயே எனது அறிவு சுற்றிச் சுற்றி வந்தது. என்னுடைய கணவர்தான் அதை மாற்றி ‘ஏன் தங்க நகை வியாபாரம் குறித்து ஆய்வு செய்யக்கூடாது?’ என்று கேட்டார். அவர் சொன்ன யோசனை தங்கமாக மின்னியது. அதன் பிறகுதான் நான் தலைப்பை இறுதி செய்தேன். ‘சில்லறைத் தங்க நகை வியாபாரத்தில் நவீன உத்திகள்’ என்ற தலைப்பை முடிவு செய்தேன்.

ஆய்வுப் பணி நடந்த நான்காண்டு காலமும் உடனிருந்து உற்சாகம் தந்தார்.

பல்கலைக்கழக நடைமுறைகளில் கடினமான சூழல்கள் வந்த போது அதை முன்னால் நின்று சரிசெய்து வழிகாட்டினார்.

அந்த வகையில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் இரண்டாவது வழிகாட்டி என்னுடைய கணவர் என்று சொல்வேன்’ என்று தான் முனைவர் பட்டம் முடித்த கதையை சொல்கிறார் சைதானி பேகம்.

கணவர் ஒத்துழைப்புத் தவிர உங்களுடைய வெற்றிக்கு வேறு என்ன காரணம் என்று கேட்டோம்.

மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.