உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் – 09
முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்புகள் இருந்துள்ளது. ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, சுபாஷ் சந்திரபோஸ் என வெளிநாட்டில் கல்வி பயின்ற இந்தியத் தலைவர்கள் பலர். இங்கிலாந்து அவர்களின் முதன்மைத் தேர்வாய் இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் குறைவான வாய்ப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனாலும், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து சென்றும் கல்வி கற்க வேண்டும் எனும் வேட்கையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையிலும் தன்முனைப்பால் நியூ யார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதாரமும், பின்னர் உலகப் புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்-ல் முனைவர் பட்டமும் பெற்றவர் சட்ட மேதை பி. ஆர்.அம்பேத்கர். கடந்த நூறாண்டுகளில் பலர் வெளிநாடுகளில் பட்டம் பெற்று புகழ்பெற்றுள்ளனர். 2023- 24 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் தரவுகளின் படி பட்டப்பிடிப்பு மற்றும் உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 13 லட்சம்.
உயர் கல்விக்காக இந்தியர்கள் தேர்ந்தெடுக்கும் நாடுகள் /பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்
United Kingdom
- University of Oxford
- University of Cambridge
- Imperial College, London
- University College, London
- London School of Economics and Political Science (LSE)
United States
- Massachusetts Institute of Technology (MIT)
- Harvard University
- Stanford university
- California Institute of Technology (CalTech)
- University of California, Berkeley.
Australia
- University of Melbourne
- Australian National University
- University of Sydney
- University of Queensland
- University of New South Wales.
Canada
- University of Toronto
- University of British Columbia
- McGill University
- University of Alberta
- McMaster University
இதை தவிர ரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பெருமளவில் தமிழக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடப்பிரிவுகள்
Engineering
- Computer Science
- Electrical Engineering
- Mechanical Engineering
- Civil Engineering
- Chemical Engineering
- Aerospace Engineering\
Business and management
- Business Administration
- Finance
- Marketing
- Human Resources
- International Business
Healthcare
- Medicine
- Nursing
- Pharmacy
- Dentistry
- Public Health
Science
- Physics
- Chemistry
- Biology
- Biotechnology
- Environmental Science
Arts and Humanities
- English literature
- History
- Psychology
- Law
- Journalism
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கான தேடல், ஏன்?
அயல்நாடுகளில் உயர் கல்வி பயில்வதில் நிறைய நற்பயன்கள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் பயின்றுவிட்டு இந்தியா திரும்பினால், முன்னோடித் தொழில் நிறுவனங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பும் நல்ல ஊதியமும் கிடைக்கின்றன. வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவர்கள் வரிசையில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இளநிலைப் படிப்புக்கு மதிப்பெண் விகிதம் ஓர் அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்திய உயர் கல்விச் சூழல் என்பது மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வு எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். IIT Bombay, IISc Bangalore, IIT Delhi, IIT Madras ஆகிய கல்வி நிறுவனங்கள் மட்டுமே உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 150 – இடங்களுக்குள் உள்ளன.இதுதான் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான தேவையும் தேடலும்.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.