ஆளப் பிறந்தோம் – 22

திரு.இள.தினேஷ் பகத்

முழுப் படிக்கட்டுகளையும் பார்க்க முடியாவிட்டாலும், நம்பிக்கையோடு முதல் படியில் உன் காலடியை வை.

– மார்டின் லூதர் கிங்

ன் இனிய சகோதர/சகோதரிகளுக்கு,

வணக்கம்.

எந்தவொரு செயலும் செய்து முடிக்காதவரை செய்ய முடியாதது போல்தான் இருக்கும். மனம் தளராமல் விடாமுயற்சியுடன் எச்செயலைச் செய்தாலும் வெற்றி எளிதாகக் கிடைக்கும்.

வெற்றி பெற்ற அனைவருமே ஒரு கடினமான தருணத்தைக் கடந்தே உச்சத்தை அடைந்துள்ளனர் என்பதை மனதில் கொண்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகுங்கள். நிச்சயம் உங்களாலும் ெவற்றி பெற முடியும்.

இந்த இதழில் உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor) பணிக்கான தேர்வு பற்றிப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர், இந்தியாவில் எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்று கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாகப் படம் பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருந்தது. யார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அவர்தான் நீதியரசர் சந்துரு அவர்கள்.

திருச்சி மாவட்டத்தில் ரங்கத்தில் கிருஷ்ணசாமி, சரஸ்வதிக்கு மகனாக 1951 – ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஐந்தரை வயதாகும் போது அவருடைய தாயார் காலமானார். இவர் உடன் பிறந்தவர்கள் 2 – அண்ணன்கள், 1 – அக்கா, 1 – தம்பி ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்காவிற்குத் திருமண வயது எட்ட அவர் மணமாகிச் ெசன்றுவிட்டார்.

வீட்டில் உள்ள அப்பா, அண்ணகள் மற்றும் தம்பிக்கு இவரே உணவு சமைப்பார். இவை ஒருபுறம் இருந்தாலும், சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்துத் தேர்வானார். முறையாகப் பயிற்சி எடுத்து 1976 – இல் வழக்கறிஞர் ஆனார். பாதிக்கப்பட்ட அனைத்து ஏழை, எளிய மக்களுக்காகவும் வாதாடினார்.

இவர் 1993 – இல் வழக்கறிஞராக இருந்த போது ஒரு ஏழைப் பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டம் சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்கள் இவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்த “ஜெய்பீம்” திரைப்படம் OTT-இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் நீதிபதியாகப் பணியில் இருந்த காலத்தில் 96 – ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறார். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் இதுவரை தீர்ப்புச் சொன்னதில்லை. இவர் அமர்ந்தால் உடன் விசாரித்து தீர்ப்புதான். நீதிபதிகளுக்கு பாதுகாப்புக் காவலர் நியமனம் செய்வது உண்டு. அப்படி யாரும் எனக்குத் தேவையில்லை எனத் தமிழக அரசுக்கு எழுதிக் கொடுத்தவர் சந்துரு அவர்கள்.

நம்மில் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும். ஆனால் வீடே நூலகத்திற்குள்தான் இருக்கிறது என்றால் அது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான இவர் வீட்டில்தான். இன்றும் தினமும் படித்துக் கொண்டே இருக்கிறார். மனித உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

கருப்பு உடை அணிந்த, கரைப்படியாத, மனிதருள் மாணிக்கமான நீதியரசர் சந்துரு அவர்களின் அரும்பணிகளை நமது “ஆளுமைச்சிற்பி” இதழ் வணங்கி மகிழ்கிறது.

தமிழக அரசின் காலியாக உள்ள Assistant Public Prosecutor பணிக்குத் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 12.10.2024 ஆகும்.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.