மூளை என்னும் முதல்வன்-05

திரு. A.மோகனராஜூ, சேலம்

மொழியும், அறிவியலும் வேறு வேறு என்று யார் சொன்னது, முன்னொரு காலத்தில்  ஒலியாக மட்டும் இருந்த ஒன்றுதான் மொழியாக  இன்று அழகுடன் வளர்ந்து அறிவியலாக மலர்ந்து மணம் பரப்புகிறது. இதில் மனித இனம் உயர்ந்து மகிழ்ந்து வாழ்கிறது.

கொசு முதல் யானைத் திமிங்கலம் வரை எல்லா உயிர்களுக்கும் மூளை என்று ஒன்று உண்டு. உணர்வுகள் என்பதும் உண்டு. மொழியென்பதும் உண்டு. பறவைகள் விலங்குகளுக்கு உலகெங்கும்  ஒரே மொழி. குயில் கூவுவது உலகெங்கும் ஒரே கூவல்தான். சிங்கம் கர்ச்சனைச் செய்வதும், யானை  பிளிர்வதும்  உலகெங்கும் ஒரே கர்ச்சனை, ஒரே  பிளிரல் தான். ஆனால் மனித இனம் ஒன்றிற்கு மட்டும்   உலகெங்கும்  அவன் பேசும்  மொழிகள் 7017. மனிதன்  மூக்கின் வழியே உள்ளிழுக்கும் மூச்சே பேச்சாக அவன் மூளை வாயின் வழியே வெளியேற்றுகிறது. அதுவே அவன் எண்ணத்தை வார்த்தையாக்கும் மொழியாக மாற்றியமைக்கிறது.

இந்த ஆயிரக்கணக்கான மொழிகளில் 150 – மொழிகளுக்கு மட்டும் இலக்கிய இலக்கண வரைமுறைகளை உருவாக்கியதும் அவன் மூளைதான். எழுத்து வடிவம் இலக்கண வரைமுறைகள் இல்லாதவர்கள் தவிர்க்கமுடியாமல் பிறமொழியைக் கற்கவேண்டியிருக்கிறது.  இதில் 6 – மொழிகள் மிகவும் பழைமையானது. அதில் சமஸ்கிருதம் (1500பிசி) கடவுளை வணங்க மட்டும் பயன்படுகிறது. கிரேக்க மொழி (1450 பிசி), எகிப்து மொழி (2690பிசி) ஹிபுரு மொழி(1000பிசி) இந்த மூன்றும் முழுவதுமாக அழிந்துவிட்டது. உலகில் ஒருவரும் இப்போது பேசுவதில்லை. சீன மொழியும்(1250பிசி) தமிழ் மொழியும்(4970பிசி) இன்றும் உலகில் உயர்ந்து வாழ்கிறது பேச்சுவழக்கில் இருந்து கோடிக்கணக்கில்  மக்களை வாழவைக்கிறது. 

ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி என்று தனித்தனியே உண்டு. தாய் உயிரையும் உடலையும் கொடுத்த அப்போதே மொழியையும் கூடவே கொடுத்தனுப்பினாள். அவள் கொடுத்த தாய் மொழியானது உடலின் ஒவ்வொரு செல்களிளும் நீக்கமறக் கலந்திருக்கிறது. மொழி வந்தபிறகே மனிதன் உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கத் தொடங்கினான். ஹெலன் கெல்லர் என்ற கண்களில்லாத, காதுகள் கேளாத  முதல் அறிவியல் பட்டம் பெற்ற ஊமைப்பெண் சொல்கிறார் “ உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது ஒவ்வொரு பெயரும் பல புதிய எண்ணங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதி தாசனின் பாடல் வரிகள் நம் உள்ளத்தில் உணர்ச்சிப் பெருக்கை இன்றும் ஏற்படுத்துகிறது.

கல்லில்தான் மனிதன் முதலில் எழுதினான் என்பதற்காக கல்லில் இப்போது நாம் எழுதமுடியாது. தற்போது எழுதுகோளும் தேவையில்லாமல் போய்விட்டது. பேனா பிடித்த அதே கையில் இப்போது மவுஸ் பிடிக்கிறோம்.  எலான் மஸ்க்கின் மைக்ரோ சிப் தலையில் பொருத்தப்பட்ட ஒரு மனிதன் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவன் மூளையில் எழும்  எண்ணங்களை, கருத்துக்களை  முழுவதுமாக அவனுக்குத் தெரியாமல் எடுத்து நேரடியாக கணினிக்கு அனுப்பி எழுத்து வடிவம் கொடுத்து  அச்சிட்டு தினப்பத்திரிக்கையில் வெளியிடும் காலம் நடந்துகொண்டிருக்கிறது.

புகைப்படம் எடுப்பது எப்படி அறிதலும், புரிதலும், சிந்திப்பதும், சிறப்பாகச் செயல்படுவதுமாக இருக்கமுடியும். ஆனால் ஒரு விந்தையைப் பாருங்கள். ஒரு இயந்திரம் பறந்த நிலையில் புகைப்படம் எடுக்கிறது (நிலவில்) எடுத்த படத்தை ஆய்வு செய்கிறது. தன் உருளும் சக்கரம் ஏறமுடியாத பெரிதான மேடும் அதன் உயரமும் எது, சக்கரம் குழியில் விழுந்து மீண்டும் ஏற முடியாத முழுவதும் மூழ்கிவிடும்  பள்ளமும் அதன் ஆழமும் எது என அளந்துக் கண்டறிகிறது. அதில் பயணிக்காமல் சமதளம் உள்ள இடம் எது எனக் கண்டுபிடித்து அதில் இறங்கி ஆய்வுகள் நடத்தி, அதில் கண்ட உண்மைகளை பூமிக்கு அனுப்பி வைக்கிறது. தற்போது சுமார் 15 – மில்லியன் உயிரிகளின் படங்களை அடையாளம் கண்டு அதன் பெயரைச்சொல்கிறது ஒரு ஏ.ஐ கணினி.

 

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.