உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் – 09
முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றார் பாரதி. மனிதர்கள் இந்த உலகத்தில் வாழும் காலம் வரை உணவு உற்பத்திக்கான தேவை இருந்து கொண்டு தான் இருக்கும். அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா உலகின் மூன்றாவது உணவு உற்பத்தி செய்யும் நாடாகும். உற்பத்தி நிலையில் இருக்கும் உழவர்கள் பெரும் பணி செய்து உணவுப் பொருள்களை உருவாக்குகின்றனர்.
மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கு நேர்தகவில் புதிய புதிய நோய்களும் உருவாகி வருகிறது.

‘உணவே மருந்து’ என்னும் பழந்தமிழரின் முதுமொழிக்கேற்ப உணவு ஆராய்ச்சி, உணவுத் தொழில் நுட்பத்தின் தேவை, உற்பத்தி செய்த உணவுப் பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுதல், தரம் நிர்ணயித்தல், புதிய உணவு வகைகளைத் தயாரித்தல், சுகாதாரச் சூழலை உறுதி செய்தல், ஊட்டச்சத்து அளவீடு மற்றும் நிர்ணயம், நேரத்தைப் பொறுத்து உணவில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தை ஆராய்தல், உணவில் வெப்பநிலையினால் ஏற்படும் மாற்றங்கள், நுண்கிருமிகளால் ஏற்படும் தாக்கம் என்னும் துறைகள் இன்றைய சூழலின் தேவையை உணரச் செய்கின்றன.

National Institute of food
Technology Entrepreneurship and Management (NIFTEM)

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (Ministry of Food Processing Industries) உணவு பதப்படுத்துதல் தொடர்பான விதிகள் ஒழுங்கு முறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவதற்கும் துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றையும் கவனித்து வருகிறது. இத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் NIFTEM கல்வி நிறுவனம் அரியானா மாநிலம் குண்ட்லி மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூரிலும் செயல்பட்டு வருகிறது. JEE முதன்மைத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இரு நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 39 – பொறியியல் கல்வி நிறுவனங்கள் உணவு தொழில்நுட்பத்தில் இளநிலை பொறியியல் (B.Tech) படிப்பினை வழங்குகின்றன. இதில்
30 – நிறுவனங்கள் தனியார் /சுயநிதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகும். TNEA – தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு முறையில் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயமில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டில் AIEEE , ICAR, JEE முதன்மைத் தேர்வு ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

உணவுத் தொழில்நுட்ப இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகள்

  1. Bachelor of Technology (B.Tech) in Food Technology.
  2. Bachelor of Science (B.Sc) in Food Science and Technology.
  3. Bachelor of Agricultural Science (B.A.Sc) in Food Science and Technology

உணவு சார்ந்த அறிவியல் பட்டப் படிப்புகள்

  1. Bachelor of Science (B.Sc) Nutrition and Dietics
  2. Bachelor of Home Science (Nutrition and Dietics)
  3. Bachelor of Agricultural Science (Nutrition and Dietics)
  4. Bachelor of Arts (B.A) in Nutrition
  5. Bachelor of Health Science (B.H.Sc) in Nutrition.

முதுகலைப் பட்டப்படிப்புகள்

  1. Master of Technology (M.Tech) in Food Process Engineering.
  2. Master of Science. (M.Sc) in Food Science and Technology.
  3. Doctor of Philosophy (Ph.D) in food Science and Technology.

பட்டய படிப்புகள்

  1. Diary Technology
  2. Meat Science
  3. Food Microbiology
  4. Food Chemistry
  5. Food Packing Technology

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.