ஆளப் பிறந்தோம் – 20
திரு.இள.தினேஷ் பகத்

நாம் வாழ்வில் அவ்வப்போது சந்திக்கும் சிறு சிறு பிரச்சினைகளால் கலக்கமடையாமல் இருந்தால்தான் நம் முன் மறைந்துள்ள மாபெரும் வாய்ப்புகளைக் கண்டறிய முடியும். எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்த போதும் ஒரு முதல் அடியை எடுத்து வைப்பதற்கு முயற்சி செய்பவர்களே வெற்றியாளர்கள். ஒரு சாதாரண விதை கூட தன் ஓட்டைப் பிரித்து, தடையைத் தாண்டித்தான் விண்ணை காணமுடியும்.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

நமது கவனம் முழுவதும் ஒன்றுதிரட்டப்பட்டு, மன உறுதியுடன் இலக்கை நோக்கி நாம் செயல்படும்போது நிச்சயம் நாம் விரும்பியது சாத்தியப்படும் என்பதைத்தான்,

“மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே
இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும்”

என்று பாரதியார் தன்னுடைய கவிதைகளில் சொல்லியுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக பொது நூலக இயக்குநராக இருந்த திரு. இளம்பகவத், I.A.S. அவர்கள் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருப்பதைச் செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். இதில் என்ன விசேஷம் இருக்கிறது? என உங்களுக்குத் தோன்றலாம். உங்கள மாதிரியும், என்னை மாதிரியும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து IAS ஆகறதெல்லாம் சாதனைதான். அவருடைய கதையை பார்ப்பதற்கு முன்னர் ICAR (Indian Council of Agricultural Research)-இல் உதவியாளர் தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்பதைப் பார்க்கலாம்.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை (UG) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

(GT) பொதுப் பிரிவினர் 30 – வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 – வயது வரையிலும், OBC பிரிவினர் 33 – வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு முறை

ICAR இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு 3 – கட்டங்களாக நடைபெறும்.

ICAR (Asst.) Prelims Exam

Subject No.of. Questions Marks Duration
General
Intelligence
25 50 1 Hour
General
Awareness
25 50
Quantitative
Aptitude
25 50
English 25 50

தவறான ஒவ்வொரு பதிலுக்கும் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

தவறான ஒவ்வொரு பதிலுக்கும் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

ICAR (Asst.) Main Exam

Paper Subject No.of questions Marks Duration
I Qualitative Abilities 50 100 2 Hours
  English Comprehensions 100 100
II Descriptive Paper   100 1 Hour

 

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.