உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -08
முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
வானம் ஒரே மாதிரி வேலையைப் பார்த்து சலித்து போகிற மனநிலை மாறி, தினம் தினம் புதுப்புது அனுபவங்களைத் தரும் புலனாய்வுத் துறைப் படிப்புகளை ஈண்டு காண்போம். புலனாய்வுத் துறை என்பது குற்றங்களைத் தீர்க்கவும், உண்மையைக் கண்டறியவும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தும் ஒரு துறையாகும். இந்தத் துறையில் படிப்பவர்கள், குற்றச் சம்பவ இடங்களில் ஆதாரங்களை சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இத்துறையின் நன்மைகள், சமூக நலன்: குற்றங்களைத் தீர்த்து சமூகத்துக்கு நன்மை செய்யலாம்.
தொழில் வாய்ப்புகள்: காவல் துறை, தனியார் புலனாய்வு நிறுவனங்கள் எனப் பல இடங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம் தடயவியல், கணினி அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
புலனாய்வுத் துறையில் உள்ள முக்கிய படிப்புகள்
- B.A., Forensic science (தடய அறிவியல்)
- B.A., Criminology ( குற்றவியல்)
- B.A., Criminology and Criminal Justice.
- B.A., Criminology and political science
- B.A., Criminology and Police Administration
B.A., Investigative Journalism (புலனாய்வு இதழியல்)
புலனாய்வு இதழியல் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஆழமாக ஆராய்ந்து, உண்மையைத் தேடிப், பொது நலனுக்கு முக்கியமான விஷயங்களை வெளிக்கொணரும் ஒரு இதழியல் வடிவமாகும். இது பெரும்பாலும் குற்றங்கள், அரசியல் ஊழல், நிறுவனத் தவறுகள் போன்ற கடுமையான பிரச்சினைகளை உள்ளடக்கியது. புலனாய்வு இதழியலாளர்கள் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கணக்கில் ஆராய்ச்சி செய்து, ஒரு அறிக்கையைத் தயாரிப்பார்கள்.
மக்களுக்கு முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துதல், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை கண்டறிந்து வெளிப்படுத்துதல், ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்டு, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருதல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணியாகும்.
காலம் : 3 ஆண்டுகள், தடய அறிவியல் துறைக்கு மட்டும் கூடுதலாக ஒரு வருடக் களப்பயிற்சி.
- தடயவியல்: குற்றச் சம்பவ இடங்களில் கிடைக்கும் தடயங்களை ஆய்வு செய்வதற்கான படிப்பு
- குற்றவியல் (Criminology): குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதை ஆராய்ந்து, குற்றவாளிகளின் மனோபாவத்தைப் பற்றிப் படிக்கும் படிப்பு.
- சட்டவியல் (Law): சட்டங்களைப் பற்றி ஆழமாகப் படித்து, குற்ற வழக்குகளில் சாட்சியாக இருக்கலாம்.
புலனாய்வுத் துறையில் படிக்கத் தேவையான தகுதிகள்:
அறிவியல் பாடங்களில் ஆர்வம்: வேதியியல், உயிரியல், இயற்பியல் போன்ற பாடங்களில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். சிறிய விவரங்களைக் கூட கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் இருக்க வேண்டும். சில சமயங்களில் களப்பணி செய்ய வேண்டியிருக்கும். மேலும் வாசிக்க…
ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.