வெற்றியோடு விளையாடு! – 21
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
போராட்டக் களத்தைப் பூக்களமாக்கி வெற்றிமாலை சூடியிருப்பவர், சிக்கல்களை சிக்கல்களாகக் கருதாமல் சவால்களாக எதிர்கொண்டு சாதித்திருப்பவர், தோல்வியில் துவண்டு விழுந்து சோர்ந்து இருக்கும் பெண்களுக்கு இவரது வாழ்க்கை நம்பிக்கை கொடுத்து தூக்கி விடும் தும்பிக்கை போல் இருக்கிறது.
சிந்தியா நடேசன், கரூர் நகரைச் சேர்ந்தவர். கரூர் காளிபாளையம் சிந்தியா நடேசன் ஃபியூயல்ஸ் (இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைக் கரூரில் படித்தார். இளங்கலை பொறியியல் பட்டத்திற்காக தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வந்தார். இளங்கலை பொறியியலில் படிப்பு பயோ டெக்னாலஜி படித்து முடித்தார். படிக்கும் போதெல்லாம் மிகப்பெரிய அளவில் இவர் கடுமையாக போராடிப் படித்ததில்லை. விளையாட்டுத்தனமாக இருப்பது இவரது சுபாவம். சில்லு விளையாட்டில் துள்ளி விளையாடும், சுட்டிக் குழந்தையைப் போல மிகவும் சுட்டித்தனமாகவே தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டார். தொடர்ந்து முதுகலைப் படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் பொறுப்புணர்வு வந்தது. வாழ்க்கைக்கு தேவையான படிப்பு படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேறப் படிக்க வேண்டும், பிறர் வாழ்க்கையை முன்னேற்றப் படிக்க வேண்டும், என்ற ஆசை சிறகடித்தது. ‘என்ன படித்தால் பிறருக்கு உதவியாக இருக்கும்?’ என்று யோசனை
செய்த போதுதான் முதுகலை எம்.பி.ஏ பிரிவில் மனிதவள மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தார்.
மனிதவள மேம்பாடு (HR) தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். தன்னுடைய எண்ணம் பிறரை உயர்த்துவதுதான் என்கிற போது அதற்கு சரியான தீர்வாக மனிதவள மேம்பாடு பிரிவு அமைந்தது என்கிறார்.
‘அறிவு ஒன்றுதான் நம்மிடம் இருக்கும் பயத்தை அகற்றும் மருந்து, அறிவை நாம் தக்க வைத்துக் கொண்டால் பயங்களை ஒழித்து விடலாம்’ என்று அழகாக தனது வெற்றிக்கான தாரக மந்திரத்தைச் சொல்கிறார்.
அறிவு எப்படிப் பயத்தை ஒழிக்கும்? என்று கேட்டோம்.
நான் எம்.பி.ஏ முடித்தவுடன் கோயம்புத்தூரில் உள்ள சிவா மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் மேலாளராகச் சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருமே அவரவர் செய்யும் வேலையை ஆர்வமாகச் செய்தார்கள். அதே சமயம் அவர்களிடம் இருந்த அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தூண்டினேன். மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.