சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

லகமெங்கும் எதிர்பார்த்த 33 – ஆவது “..ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி..” பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை
26 – முதல் ஆகஸ்ட் 11 – வரை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

இதில் 206 – நாடுகளின் வீரர்களுடன் இந்தியா சார்பாக 117 – வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் கைகளில் “..பதக்கங்களும் ஜொலிக்கட்டும்..” என்று நம்புவோம்..!!! 

இந்த நம்பிக்கைக்கு முதல் காரணம் போட்டி துவங்கும் முதல் நாளே “..வில்வித்தை விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாக நம்முடைய வீரர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்..” என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழகத்தில் “..வில்வித்தையில் நம்பிக்கை நட்சத்திரமாக..” ஜொலிப்பவர்களில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பதினான்கு வயது பா.பாலகுருநாதன் எனும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனீ மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த இம்மாணவர் தேசிய அளவில் பல பதக்கங்கள், சான்றிதழ்கள், பாராட்டும் பெற்று சர்வதேச அளவிற்குத் தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்.

வில்வித்தையில் பெற்ற பதக்கப்பட்டியல்…

#  2021 – ல் மதுரை மாவட்ட அளவில் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இவரது முதல் தங்கப் பதக்க வேட்டை தொடங்கியது.

#  2021 – ல் தென்காசியில் நடந்த M.M.வில்வித்தைப் போட்டியில் (இந்தியாவில் பயன்படுத்தப்படும் வில்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

# 2022 – ல் திருப்பூர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் (இந்தியாவில் பயன்படுத்தப்படும் வில்) 14 வயதிற்கு கீழ் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

# 2022 – ல் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இந்திய வகை  RECURVE BOW-ல் தங்கப் பதக்கம் பெற்றார்.

# 2022 – ல் கொடைக்கானல் லோட்டஸ் ஸ்போட்ஸ் அகடாமி சார்பில் நடைபெற்ற இரண்டாவது மாநில அளவிலான போட்டியில் இந்திய வகை  RECURVE BOW – ல் வெண்கலம் வென்றார்.

# 2022 – ல் சேலம் “..கண்களைக் கட்டிக் கொண்டு வில்வித்தையில் ஆரஞ்சு உலகச் சாதனை’’ நிகழ்த்தியது.

# 2024 – ல் ஜூன் மாத இறுதியில் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தனிப்பிரிவு மற்றும் அனைத்து பிரிவிலும் வென்று முதலிடம் பெற்று “..தங்கப்பதக்கம்..” பெற்றிருக்கிறார்.  

பாலகுருநாதனின் மற்றுமொரு திறமை என்னவென்றால், கண்ணைக் கட்டிக் கொண்டு கலர் பந்துகளில் குறிப்பிட்ட கலர் பந்தை மிகச்சரியாக எடுத்து விடுவார்.

ஒரு புத்தகம் கையில் கொடுத்தால் அதன் தலைப்பு, எத்தனையாவது பக்கம், அதிலிருக்கும் ஒரு பாராவையும் படிக்க முடியும் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் நம்பர் சொல்ல முடியும்.

அடுத்து சீட்டுக்கட்டை கழித்து போட்டு, அதில் குறிப்பிட்ட குறியீடு கொண்ட கார்டை தனியாக எடுக்க முடியும், இதுபோன்ற வகைகளுக்கு “..BRAINY..” எனும் நினைவாற்றல் திறன் பயிற்சியில் இரண்டாம் கட்ட தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..! மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.