மூளை என்னும் முதல்வன்-04

திரு. A.மோகனராஜூ, சேலம்

ரிசு என்றால் எல்லோருக்கும் மகிழ்வைக்கொடுக்கும் ஒன்று. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பரிசாக நாம் வாங்காவிட்டாலும் கூட  நாம் எல்லோரும் என்றாவது ஒரு நாள் ஒரு சிறிய பரிசைப் பெற்று மகிழ்ந்து இருப்போம் அல்லது பாராட்டு ஒன்றை வாங்கி இன்புற்று இருந்திருப்போம். அந்த  நிகழ்வு நம் வாழ்நாள் முழுவதும்  நினைக்கும் போதெல்லாம்  நமக்கு மகிழ்வைத் தந்து கொண்டுதான் இருக்கும். அப்படி ஏதும் இதுவரை உங்கள் வாழ்வில் நடக்கவில்லை என்றால் இனி கண்டிப்பாக நடக்கும்.  ஒரே ஒரு  நிபந்தனைதான், உங்கள் மூளையை எப்படியாவது எங்காவது நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஒரு வயதான பெரியவர் உடல் நலமில்லாது பல மாதங்கள் படுத்திருந்தார். பல உறவுகள் வந்து பார்த்து வருந்திச் சென்றனர். ஒரு நாள் சிலர் ஆறுதல் சொல்லிக் கொண்டு அருகமர்ந்து இருந்தார்கள். அன்று அவர் நண்பர் ஒருவர் நீண்ட  நாட்களுக்குப் பிறகு அவரைப் பார்க்க  வந்திருந்தார்.  வந்தவர் ‘‘இவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதானே’’ என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார். ‘‘பணமில்லாமல் பல தலைமுறைகளாக ‘‘வறுமையில் வாடித் துடிக்கும் இவர்களுக்கு மருத்துவமனைக்குச் செலவு செய்ய யார் பணம் கொடுப்பது’’ என்று  பதில் கொடுத்தார் ஒருவர்.

‘நீங்கள் கொடுப்பீரா?’’ என்றும் கேட்டுவிட்டார். என்ன செய்வது என்று தடுமாறிய நண்பர் மெல்லத் தரையைப்பார்த்து பின்  மேலே வீட்டின் கூரையை வெறுத்துப்பார்த்தார். அங்கே பரண்மீது ஒரு பெட்டி கிடப்பதைக் கண்டார்.  ‘‘அந்தப்பெட்டி என்னப் பெட்டி? பணப்பெட்டி போல இருக்கிறது’’, என்று கேட்டார். அதுபற்றி  யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். படுக்கையில் இருக்கும் உங்கள் நண்பருக்குத்தான் தெரியும் என்று ஒருவர் சொன்னார். படுத்திருந்த  நண்பரும் மெல்ல முயன்று ‘‘அது என் தாத்தாவிற்கு அவர் தாத்தா கொடுத்தது. என்னிடம் இப்போது இருக்கிறது. ஆனால் அது பூட்டப்பட்டு இருந்ததாலும் சாவி இல்லாததனாலும் அழகான பெட்டி என்பதாலும் அதை மேலே போட்டு வைத்திருக்கிறேன். ஆனாலும் அதில் ஒன்றுமில்லை என்பது எனக்குத்தெரியும்’’ என்று சொன்னார்.

‘‘நண்பர் அதை எடுக்க முடியுமா?’’ என்று கேட்டார். சிரமப்பட்டு பல முயற்சிகளைச் செய்து அந்தப்பெட்டியை எடுத்துக் கொடுத்தார்கள்.  அதை ஆட்டிப் பார்த்தார் அதில் ஒன்றுமில்லை. ‘‘ஆமாம் ஒன்றுமில்லை’’ என்று சொல்லியபடி பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு ‘‘ஒரு சுத்தி கிடைக்குமா?’’ என்று கேட்டார். ஒருவர் பழைய சுத்தி ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். கடினமாகத்தான் இருந்தது எப்படியோ பூட்டை உடைத்துவிட்டார் உள்ளே பார்த்தால் ஒன்றுமில்லை.

ஆனால், ஒரு வெள்ளைத்தாள் எழுதப்பட்டு இருந்தது. ஆவலுடன்  அதைப் படித்துப்பார்த்தார் அதில் “வீட்டின்  வடகிழக்கு மூலையில் 5 அடித்தொலைவில் 5 அடி ஆழத்தில்  உங்களுக்கு  வேண்டியதெல்லாம் கிடைக்கும்” என்று எழுதியிருந்தது. ‘‘ஒரு கடப்பாரையையும்  மம்முட்டி ஒன்றும் கொண்டு வாருங்கள்’’ என்று கேட்டு 5 அடி தூரத்தில் 5 அடி ஆழத்தில் வடகிழக்கு மூலையில்  தோண்டினார்.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.